சகுனி………ஒரு தலைவலி மாத்திரை ஆர்டர் பண்ணுங்கப்பா ..
ரொம்ப நாள் கழிச்சு தம்பிய கூட்டிட்டு படத்துக்கு போலாம் நு முடிவு பண்ணி அம்மா கிட்ட 200rs வாங்கிட்டு போனேன் …தியேட்டர் வாசல்லையே நம்ம கார்த்தி பெரிய cutout ல சிரிச்சுட்டு நின்னாப்ள ..அப்போவே எனக்கு மைல்ட் டவுட் வந்துச்சு ..சரி நம்ம சந்தானம் சகல இருக்காப்ல நு தைரியமாஹ் போனேன்.டிக்கெட் 85rs ..
first half
#tweetku : இன்டர்வல்ல காபி குடிகலான உங்க உயிர்க்கு தியேட்டர் நிர்வாகம் பொறுப்பு அல்ல….
Detail :
தம்பி கார்த்தி intro லாம் ஒன்னும் சொல்லிகுற மாதிரி இல்ல ..intro சாங் லையே தியேட்டர்ல பாதி பேரு கடுப்பு ஆகிடாங்க ..(நான் சொல்லலைபா ..ஊர்ல பேசிகிட்டாங்க )
intro முடிஞ்சா உடனே நம்ம சந்தானம் என்ட்ரி..ஹப்பா இனிமே தியேட்டர்ல விசில் சப்தம் தாண்டா சாமின்னு நினைச்சு காத close பண்ண கர்சீப் ரெடி பண்ணேன்…ஆனா நான் கர்சீப் ரெடி பண்ணது விசில் சப்தம்த சமாளிக்க இல்ல குரட்ட சத்தத சமாளிக்க தான்னு பின்னாடி தான் எனக்கு புரிஞ்சது …
கார்த்தி பணக்காரன்னு நினைச்சு நம்ம சந்தானம் கார்த்திய அவரு ஆட்டோல ஏற சொல்லி உயிர் எடுக்குறாரு ..கார்த்தியும் change இல்ல change இல்லன்னு சொல்றாரு (அவரு பாஷைல change இல்லை நா காசு இல்லைன்னு அர்த்தம்மாம் ).
இத புரிஞ்சிகாத சந்தானம் change இல்லாட்டி கார்ட் தெய்சுக்கலாம் வாங்கனு சொல்றாரு ..
சந்தானம் தொல்ல தாங்காம அவரும் வண்டில ஏறுறாரு ..அப்புறம் தான் ஸ்டார்ட் ஆகுது flashback லாம் …கமலக்கண்ணன் (அதாம்பா நம்ம கார்த்தி..) ரஜினி அப்பாதுரை (அதான் நம்ம சந்தானம் ) பேரு combinationல தோஸ்த் ஆகுறாங்க(ஆகி தான ஆகனும்)
அப்புறம் என்ன flashback தான் …கார்த்தியோட பூர்விக வீட்ட சப்வே கட்ட இடிக்க போறதா ஆர்டர் வருது …உடனே கார்த்தியோட தாத்தா(நம்ம அசத்த போவது யாரு ல வருவாரு ல அவரு தான் ) கார்த்திகிட்ட பொலம்புறாரு ..ஊருக்கே சோறு போட்ட வீடு (வீடு எப்படி சோறு போடும்? ஒரு வேல வீட்ட வித்து வேணா சோறு சாப்டலாம் ).
உடனே கார்த்தி கேளம்புறாரு எங்க? வேற எங்க சென்னைக்கு தான்..
அப்புறம் கட்சி ஆபீஸ் அமைச்சர் ஆபீஸ்கு லாம் அலையறாரு…அமைச்சரோட family tree la இருக்குற எல்லாரும் நம்ம ஹீரோவ அலைய வைக்குறாங்க …அதுல ஒருத்தன் அவன் பொண்டாட்டி கார்த்திய சைட் அடிக்குறது பார்த்து கடுப்பு ஆகி கார்த்தி மேல போலீஸ் கம்ப்
ளைன்ட் குடுக்குறான் ..அங்க தான் அனுஷ்கா என்ட்ரி ..போலீஸ்!!!!!
எந்த டிரஸ் போட்டாலும் அனுஷ்கா அழகு தான்பா..அனுஷ்கா கார்த்திய பார்த்து .அவர பொண்ணு பார்க்க வந்த மாப்ளன்னு நினைச்சு காபி ஷோப்கு கூட்டிட்டு போறாங்க ..அங்க தான் கார்த்தியோட ஸ்டோரி கேட்டு அப்புறம் அவங்க mistake ரியலிஸ் பண்றாங்க ..அப்புறம் கார்த்திய பார்த்து வலியுறாங்க (நமக்குலாம் இங்க கடுக்கு தாளிக்குற சௌண்ட background மியூசிக் ஓடுது )
அப்புறம் திடிர்னு ஆண்ட்ரியா வராங்க ..இப்படியே நம் உறவினர்கள் அனைவரும் வாரங்க …
கார்த்தி சாப்டுற எல்லாத்துக்கும் சந்தானம் தான் பைன் கட்ட்ராபுல ..including transformer ல மூத்திரம் போன கேஸ் வரைக்கும் ..
அப்புறம் heroine மீட் நடக்குது ..heroine வந்து நம்ம கார்த்தியோட அத்த பொண்ணு தான்..பார்த்து 15 வருஷம் ஆகுத .சந்தானம் புண்ணியம் ல இந்த சின்ன வயசு புப்பி லவ் லாம் 2second ல கலாய்ச்சு முடிசுடுறாங்க.(இந்த கள்ளி செடி என்ன பாவம் பண்ணுச்சு ..எல்லா படத்துலயும் அத blade போட்டு கீறி நாசம் பண்றீங்க ..நான் சொல்றது puppy லவ் சீன் பா )
..ரோஜா தான் அத்த …(நமக்கு தான் வந்து வாய்குது ..ஒரு அத்த பொண்ணாவது வெள்ளையா இருக்கா இல்லை அத்த தான் ரோஜா மாதிரி இருக்கா.. வாட் எ பிட்டி ???)
ரோஜா தான் ரயில்வே மினிஸ்டர் கு பாமிலி டாக்டர் ..வீட்ட நான் மீட்டு தரேன் நு சொல்லி கார்த்திய வீட்டுல டிரைவர் வேளைக்கு வச்சுக்குறாங்க..அப்புறம் என்ன கார்த்தி heroine கு ரூட் விடுறாங்க …ஒன்னும் வேளைக்கு ஆகல ..சரின்னு கார்த்தி கார் துடைகுராப்புல ..அப்போ heroine வந்து “மாமா” நு சொல்லி பாசமழை பொளியுறாங்க(பசங்க வேல செஞ்சா தான் பொண்ணுகளுக்கு பிடிகாதே!!!).இவ்ளோ நாள் சும்மா வெளயாடுனேன் நு சொல்றாங்க,ஹீரோ லவ் பண்றாரு (பண்ணி தான ஆகனும் ..கார் தான் தொடைக்க விடல லவ் யாவது பண்ணலாம் நு தான்)..அப்புறம் பணக்கார அத்த ரோஜாக்கு லவ் மேட்டர் தெரிஞ்சு …ஊர்ல இருந்து வந்து என் பொண்ண காசுகாக மயக்கி காமெடி பண்றியானு கடுப்பாகி கண்டிநியூஸ் அஹ dialgoue பேசுறாங்க ..ஹீரோ வெளிய வறாரு …flashback ஸ்டாப்…இப்போ தான் சந்தானம் realsie பண்றாரு இவன் கிட்ட காசே இல்லை நு..அப்புறம் என்ன தல சுத்தி ..கீழ விழுந்து எந்திரிச்சு காசு கேட்குறாரு…
உடனே கார்த்தி தாத்தா சொன்ன காரணத்துனால cm praksahraj கிட்ட வறாரு (ரீசன்: பிரகாஷ்ராஜ் election அப்போ கார்த்தி வீட்டுல வந்து சாப்டு vote கேட்டு போய் இருக்காப்ல )..அங்க போனா கார்த்திய அவமானம் படுத்தி அனுப்புறாங்க ..சைடுல நம்மளையும் படுத்தி எடுக்குறாங்க …..
ஆடோக்கு due கட்ட காசு இல்லன்னு அலறாப்புல சந்தானம் …ராதிகா தான் ரமணி அக்கா..சந்தானம்கு காசு குடுத்த கந்துவட்டி அம்மா ..கார்த்தி சந்தானத்த கூட்டிட்டு ராதிகா வீட்டுக்கு போறாங்க ..அங்க ஒரு problem ஓடிட்டு இருக்கு ..உடனே நம்ம கார்த்தி ராதிகாவ counseller election ல நிக்க சொல்லுறாரு …ராதிகாக்கு பல்பு எரியுது …சுத்தி இருக்குற ரௌடிக்கு அடிவயிறு எரியுது …உடனே பஞ்ச் லாம் பேசி ராதிகாவ ரொம்ப சீண்டிவிட்டு ராதிகாக்கு தம்பி ஆகுறாரு..
After Head ache…
That is Second half:
Election காமெடி லாம் இங்க தான் ஸ்டார்ட் ஆகுது..ராதிகா வ பத்தி ஊரே கேவலமா பேசுது..ராதிகாவ சுத்தி இருக்குற ரவுடி லாம் இது வேலைக்கு ஆவது நு சொல்றாங்க…கார்த்தி விடுற மாதிரி இல்லை (பின்ன!! காசு குடுத்து இருக்கோம் ல நீ நடத்து ராசா ).ரவுடி லாம் சோசியல் சர்வீஸ் செய்யுறாங்க ,பசங்களுக்கு கிரிக்கெட் பேட் பால் லாம் வாங்கி தராங்க..இங்க தான் இதே வார்டு ல பிரகாஷ்ராஜ் கீப் கிரண் (செம ர்ஹைமிங் ல) நிக்குறாங்க ..லாஸ்ட் ல ராதிகா counsellor ஆகுறாங்க ..
கிரண் தோக்குறாங்க..ராதிகா சென்னை சிட்டி mayor ஆகுறாங்க …கார்த்தி மேல சத்தியம் பண்ணி பதவி ஏற்குறாங்க(..அப்படியே எங்க பேரையும் போட்டுகோங்க ..காசு குடுத்து எங்கள நாங்களே காவு குடுத்து இருக்கோம் ல ???)
உடனே சந்தானம் ராதிகா PA ஆகுறாரு ..கார்த்தி சொல்லி ராதிகா பிரகாஷ்ராஜ் பில்டிங் லாம் இடிக்குறாங்க (சட்டத்துக்கு புறம்பா கட்டப்பட்டது !!)
உடனே கார்த்திய கஞ்சா கேஸ் ல உள்ள தூக்கி போடுறாங்க ..ஜெயில்ல கோட்டா ஸ்ரீனிவாசராவ் அஹ பாக்குறாரு ஹீரோ..(இவரு தான் எதிர் கட்சி தலைவர் ..கட்சி ஸ்டார்ட் பண்ணதுல இருந்தே தான்..)..ஹீரோ பேசி பேசியே அவர நல்லவரு ஆகுறாரு..ஹீரோ கோர்ட் ல போட்ட மொக்கை ல சந்தானம் ஜெயில் உள்ள வறாரு ..ஹீரோ வெளிய வறாரு …வந்து கோட்டா ஸ்ரீனிவாசராவ் கூட சேர்ந்து கட்சியில் இருக்குற மொக்க ஆளுங்க எல்லாம் வெளிய அனுபுறாரு ..அவங்க லாம் பிரகாஷ்ராஜ் கூட join ஆகுறாங்க ..கட்சி மேல கேஸ் போடுறாங்க ..கோட்டாவா ரோட்டுக்கு கொண்டு வறாரு …(என்னதாண்டா நடக்குது இங்க நு தியேட்டர் பாதி பேரு தூங்கி எந்திரிச்சு உட்கார்ரங்க …)
புதுசா கட்சி ஸ்டார்ட் பண்றாரு..அடிமட்ட தொண்டர்கள் வேட்பாளர் அஹ நிக்குறாங்க ..போட்டி ஸ்டார்ட் ஆகுது..
மாறி மாறி பிரசாரம் பண்றாங்க ..இங்க தான் பிரகாஷ்ராஜ் ஒரு ட்விஸ்ட் வைக்குறாரு..ஹீரோ அத அவுக்குராறு …நம்மள கவுக்குராறு …அப்புறம் என்ன கோட்டா வின்னிங் ..subway ப்ராஜெக்ட் கேன்சல் பண்றாரு ..ரயில்வே ஸ்டேஷன் ல heroine join ஆகுறாங்க …(எம்மா எங்க போண நீ …சொல்லாம கொல்லாம நீ பாட்டுக்கு வர…)..அப்புறம் என்ன கட்டுபுடி வைத்தியம் ..திடிர்னு ஒரு போன் கால்..வேற எங்க நார்த் ல இருந்து தான் …நம்ம கார்த்திய problem solve பண்ண சொல்லி பார்லிமென்ட் ல இருந்து கூப்டுறாங்க ..இவரும் குல்லா
மாட்டிட்டு போஸ் குடுக்குறாரு ..அப்புறம்……
விட்டா கேட்டுட்டே இருபிங்க போல …அவ்ளோ தாங்க
என்னபா பாட்டு எதுவும் இல்லையா நு கேட்குறீங்க லா …இத படிக்கும் போது எங்க லாம் கடுப்பு வருதோ அங்க லாம் ஒரு பாட்டு போட்டுகோங்க …(கொய்யாலே ..!!!)..
வீட்டுக்கு போகும் போது சாரிடான் வாங்கிட்டு போங்க ..gud nite
பி.கு.: இது என் முதல் பதிவு ..பிழை இருந்தால் மன்னிக்கவும் ..
புதிய பதிவரா…மென்மேலும் வளர வாழ்த்துகள் நண்பரே.
அந்த வேர்டு வெரிஃபிகேசனை நீக்குங்கள்.
தலைவா வணக்கம் ..நீங்க தான் என் inspiration ..நான் படிச்ச முதல் ப்ளாக் உங்களுது தான் ..நான் உங்க ரசிகன் …இப்போ தான் first டைம் எழுதுறேன் ..தமிழ் ல எழுத எந்த டூல் use பண்றீங்க ..கொஞ்சம் சொல்லுங்க
தலைவா வணக்கம் ..நீங்க தான் என் inspiration ..நான் படிச்ச முதல் ப்ளாக் உங்களுது தான் ..நான் உங்க ரசிகன் …இப்போ தான் first டைம் எழுதுறேன் ..தமிழ் ல எழுத எந்த டூல் use பண்றீங்க ..கொஞ்சம் சொல்லுங்க
;0
புதிய பதிவரா…மென்மேலும் வளர வாழ்த்துகள் நண்பரே.
🙂