நண்பனின் பிரிவு -தரும் வலி

பிரிவு ஒன்னு தான் வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாதது.அது தரும் வலி எதற்கும் ஈடாகாது.

ஒரு மனிதன் பிறக்கும் போதே பிரிவின் வலியை உணர்கிரான்.சில பிரிவுகள் சொல்லாமல் கொள்ளாமல் வந்து நம்மை புரட்டிபோட்டுவிடும்.சில பிரிவுகள் நமக்கு முன்னாடியே வரும் என தெரியும்,அந்த நொடியை எதிர் கொள்ள தினம் தினம் நாம்
நம்மை நம் மனதை தயார் செய்கிறோம் .

முதல் ரகம்,ஒரு நொடியில் வரும் மரண ஓலம்.இரண்டாவது,தினம் தினம் வரும் மரண
பயம். மொத்தத்தில் பிரிவு,நாம் உணரும் மரணம்.நம் உணர்வுகளின் மரணம்.

ஒரு குழந்தை முதலில் பிறக்கும் போது தான் பத்து மாதமாக வளர்ந்த தாயின் கருவறையை பிரிகிறது.இந்த பிரிவு பெற்ற தாய்க்கு சுகம் தரும் வலி.பிரிவினால் வரும் முதல்
மகிழ்ச்சி.வித்தியாசமாக,விந்தையாக பிரிவு கூட ,சுகம் தரும் தருணம் இது.

அந்த குழந்தை கொஞ்சம் வளர்ந்தபின் தாய் தன் குழந்தையை விட்டு விலக ஆரம்பிக்கிராள்.அது வரை தூக்கி கொஞ்சிய தந்தை அன்னியம் ஆகிரான்.இது நம்மையும் அறியாமல் வரும் பிரிவு. அந்த குழந்தை தனக்கென்று ஒரு நட்பு வட்டம் உருவாக்கிக்கொள்கிறது .

அந்த குழந்தை ஐந்தாவது படிக்கும் வரை தாய் தந்தை தன் குழந்தை தன்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்கிறது என்று உணரமாட்டார்கள்.

அவன் ஆறாவது நுழைந்தவுடன்,ஒரு பெரிய நட்பு வட்டத்துக்குள் நுழைகிறான்.அந்த நட்பு தான் அவனை அவன் எதிர்காலத்தை செதுக்க உளியாக இருக்கிறது.அது வரை விடுமுறை நாட்க்களை தன் வீட்டில் ,உறவினர் வீட்டில்,தன் அத்தை பெண்களுடன் விளையாடியது,தன் சித்தப்பா பசங்களுடன் ஆடிய கிரிக்கெட் என உறவினர் பாசத்தை அனுபவித்த அவன்
ஒரு மன முதிர்ச்சி ஏற்ற்பட்டு அனைத்தையும் விடுத்து நட்பை நோக்கி,நன்பனின் வீட்டை நோக்கி தன் மிதிவண்டியை மிதிக்கிறான்.அப்பொழுதும் அவன் உணரவில்லை தன் உறவிணர்களின் பிரிவை.

“வீடுக்கு வாடா தம்பி“,எனக்கூப்பிடும் அத்தையை அவன் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.ஏனென்றால்,இவர்கள் அனைவரும் தரும் சுகம்,நட்பு ஒரு கடித்த நெல்லிக்காயில் எளிதாக தருகிறது.

ஒன்பது பத்தாம் ,வகுப்பு ஹொஸ்டெல் வாழ்க்கை,மனித இயந்திரத்தை தயார் செய்ய்ய ஆரம்பிக்கிறது.அது வரை நெல்லிக்காய் பரிக்க முதுகை காட்டிய நண்பன்,பள்ளாங்குழி ஆட புளிக்கொட்டை கொண்டு வந்த தோழி,கூட்டான்சோறு ஆக்க அரிசி தந்த கோகுல் அக்கா..என எல்லாரயும் விட்டு வருகிறோம்.

அம்மாவின் தோசையின் ருசி ,ஹொஸ்டெல் மெஸ்ஸில்
சப்பாத்தி சாப்ப்டும் போது தான் உணர்கிரோம்.அது வரை சாப்பிட்ட தட்டை கூட எடுக்காத நாம்,டீ குடித்த டம்ப்ளரை கூட தூக்கி கிச்செனில் போடும் நாம்,மனசாட்ச்சியே இல்லாமல் கிரிக்கெட் விளையாட வெள்ளை சட்டை போட்டு,அதை நாறடித்து
அம்மாவிடம் துவைக்க தூக்கி போடும் நாம்,முதல் முறையாக நம் தட்டை நாமே கழுவுகிறோம்,நம் துணியை நாமே துவைக்கிரோம்.நம் வெள்ளை சட்டையை துவைக்கும் போது ,

அம்மாவின் நியாபகம் வருகிரது “அம்மா,எப்படிமா நீ இத
துவைச்ச”,கண்களில் பிரிவின் முதல் பரிசாக கண்ணீர்!!!,கைகளில் வலி.

அப்பொழுது நம் மனம் எந்த ஒரு பிரிவுக்கும் நம்மை தயார் செய்கிறது.நம் மனம் படிப்பில் நாட்டம் கொள்கிறது.நம் சுற்றுசூழல் நம்மை நாட்டம் கொள்ள வைக்கிரது.படிப்பு நம் சொந்தங்களை நம்மிடம் இருந்து விலக்குகிறது.

பண்ணிரெண்டாம் வகுப்பு,நினைத்து பாருங்கள்,சொந்தம்,கல்யாண நிகழ்சிகள்,தாத்தா பாட்டி இழவுக்கு கூட போக முடியாத படிப்பு(நரி வளை).நம் பிறந்த நாள் மறந்து போகும் அளவுக்கு படிப்பு,படிப்பு,படிப்பு….!!!!!!!!!!!! இந்த நான்கெழுத்து வார்த்தை நம் நான்கு திசையை சுருக்கி
நம்மை ஒரே திசையில் பயணிக்க வைக்குறது.அந்த பயணம் நம்மை “இருளிள் நம்மை சுற்றி இருக்கும் அப்பா,அம்மா,அண்ணன்,தங்கை பாசம்,சொந்தம்,மகிழ்ச்சி,விளையாட்டு என்ற மின்மினி பூச்சிகளை மறந்து,படிப்பு என்னும் மெழுகுவர்த்தியை தேடி ஓட வைக்குறது”,அந்த ஓட்டத்தில் நாம் பிரிவை வலிகளை உணருவதில்லை.

கல்லூரி,”நான் நாமக்கல்,நீங்க ஈரோடா??”,என்ற கேள்வியில் தொடங்குகிறது.அதில் இருந்து நண்பன் நம்மை ஆட்க்கொள்கிறான்.

அம்மாவை போல ஒரு காதலி வருகிரதும் இந்த கல்லூரி வாழ்க்கையில் தான்.அவள் வந்த பின் உடல் மட்டும் நண்பனை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக பிரிகிறது.அந்த வலி பெற்றொரை விட்டுப்பிரியும் வலியை விடக்கொடுமையானது.ஆனால் காதலி அந்த வைலியை மறக்க வைக்கும் மதுவாக வருகிறாள்.

அவள் நினைத்தாள்,”ஒன்றும் இல்லாதவனை இந்த உலகமே திரும்பி பார்க்க வைக்கும் மனிதனாக்கலாம்”.எல்லாம் அவள் கையில்.

அது வரை அப்பா அம்மா சொல்லி கேட்காத,நண்பன் சொல்லி கேட்காத அவன் காதலி சொல்லக்கேட்கிறான்..அவன் அவளுக்கு குழந்தை.அது அனுபவித்தால் மட்டுமே புரியும்.நாம்நம் நண்பனுடன் எப்ப்பொழுதாவது வெளியே போய்வந்தால் “அவன் தா உன்ன கெடுக்குறது”, என்று நண்பனை திட்டும் போது வரும் கோவம்,அவள் கூறும் அத்தனைவார்த்தைகளையும் வாங்கிக்கொண்டு “தங்கச்சி எதோ கோவத்துல திட்டுது ,என்ன தான் திட்டுது விடு மச்சான்”,என்று சொல்லும் நண்பன் நம் மனதில் உயர்ந்து நிற்கிறான்.அவன் கிடைக்க நான் புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும்.

கல்லூரி வாழ்க்கை முடிவுக்கு வர இன்னும் ஒரு வருடம் கூட இல்லை….நம் வீட்டை விட அதிகமாய் நேசித்த கல்லூரி,மெஸ் சாப்பாடு பொய்க்கும் போது பசியாற்றிய கேன்டீன்,11ரூபாய் ஜூசுக்கு ஒரு ரூபாய் கம்மியாக குடுத்தால்,“பரவாயில்லை தம்பி,அடுத்ததடவ குடு”,என கூறும் கேன்டீன் அண்ணா,மாலை நேரத்து சைக்கிள் டீ,சமோசா,ஒரு மணி வரை அரட்டை,லேப்டாப்பில் புதுப்படம் போட்டு பார்த்துடு,“ஸ்டோரி ஓகே.ஆன ஸ்கிரீன் பிளே சரி இல்ல” நு சொல்லும் மதிய நேரம்ஞாயிற்றுக்கிழமைகள்.,வாரக்கடைசியில் பத்து சட்டை, ஒரே ஒரு ஜீன்ஸ் பேன்ட் துவைக்கும் கொடுமைகள்.இரவு ரேடியோ சிட்டியில் லவ் குரு கேட்க்கும் சுகம்,இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இன்டெர்சிட்டியில் படிக்கட்டில் நண்பனுடன் அம்மா சுடும் தோசையை எண்ணி பயணிக்கும் அந்த மாலை பொழுது,வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது அம்மா ஆசயாய் குடுக்கும் நூறு ரூபாய் நோட்டும் ஒரு முத்தமும்,பஸ் ஏறினவுடன் ஆனந்த விகடன் படிக்கும் ஆர்வம்,டி-நகரில் சரவணா ஸ்டோர்ஸில் எல்லா மாடியும் ஏறி இறங்கி ஒரே ஒரு சட்டை எடுக்கும் பொழுது முறைக்கும் நண்பனை ஒரு ஜூஸ் வாங்கி குடுத்து சமாதானம் செய்யும் இரவு,சென்னை வெயில்,அட்டெண்டன்சுக்காக உயிரை பணயம் வைக்கும் தைரியம்,செமஸ்டெர் டைமில் கட்டிலை முட்டி முட்டி படிக்கும் இரவுகள்,ஜெராக்சை பிச்சு எடுத்து,பிச்சை எடுத்து படிக்கும் எஃஸாம் பொழுதுகள்,எஃஸாம் முடிந்தவுடன் எந்த ஜெராக்ஸில் படித்தோமோ அதே ஜெராக்ஸை மிதிச்சு நடக்கும் திமிர்,மணிக்கு ஒரு தரம் சாப்பிட்டியா,தூங்கிட்டியா,என்ன பண்ற என்று செல் போனில் சிணுங்கும் தோழி,எப்பயாவது வரும் பேய்க்கனவில் பயந்து ஓடி போய் நண்பன் பக்கத்தில் திருனீரு வைத்துக்கொண்டு படுக்கும் நடுனிசி இரவுகள்,பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ,அதில் விழும் அடிகள்,அடித்தவுடன் “மச்சான்,வலிக்கும் போது சொல்லு டா”,என்று சொல்லும் நண்பர்கல்……

இத்தனையும் பிரியும் சக்தி எனக்கில்லை.நீங்கள் கேட்கலாம் “ஏன்? இவ்ளொ நாள் உன் அப்பா அம்மா எல்லாரயும் பிரிந்து இருந்தாயே?” ,என்று.அது முதல் ரகம்,“ஒரு நொடி வரும் மரணம் போன்றது.ஆனால்,நண்பனை,தோழிகளை பிரிவது மரண பயம் போன்றது.

இன்னும் ஒரு வருடம் தான் நான் அவர்கள் மேல் உரிமை கொண்டாட முடியும் என்று நினைக்கும் போது,“எல்லாம் இருந்தும் நான் ஒன்றும் இல்லாதவனாகிரேன்”.என்
“எல்லாம்”,அவர்கள் தான்.ஒன்று மட்டும் நிட்ச்ச்யம் ,“இதுவரை வந்த பிரிவுகள் எனக்கு தெரியாமல் நான் அறியாத வயதில் என்னுள் நுழைந்தவை,ஆனால் இப்பொழுது வரப்போகும் பிரிவு,என்னுள் இருப்பதை என்னிடம் இருந்து பிரித்து என்னை எனக்கே
அடையாளம் தெரியாமல் ஆக்கப்போகிறது”.

காதலி மனைவியாக தொடர்வாள்,ஆனால் நண்பன்,நண்பனாகவே வந்தான்,நண்பனாகவே இருந்தான்,இப்பொழுது நண்பனாகவே செல்லப்போகிறான் .நண்பா ஒன்று மட்டும் மறவாதே “பிரிவு-
பிறிதொரு நாளில் சேரவே”,சேருவோம் என்ற என்ற நம்பிக்கையில் பிரிவோம்.பிரிவோம்,சந்திப்போம் என்ற நம்பிக்கையில்.

Comments
7 Responses to “நண்பனின் பிரிவு -தரும் வலி”
 1. நீங்க எந்த ஊரு?

 2. நாமக்கல் தலைவா..நீங்க??

 3. சேகர்.த says:

  டேய்.. நீயா இது?.. எழுத்தின் நடை நன்றாக உள்ளது.. நீ எல்லாம் நல்ல வருவடா!!

  • உன் போன்ற நண்பன் இருந்தால் நான் மட்டும் அல்ல,யார் வேண்டுமானாலும் நன்றாக வருவார்கள்.

 4. பொத்தனூர் (நாமக்கல் மாவட்டம்)

 5. siraj says:

  நட்பை பற்றிய அழகான உரைநடை, தோழா அருமை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: