அப்பா!!!- நாம் தாண்ட , தான் சரியும் சுவர்

 

 அப்பா ,நம்மில் எத்தனை பேர் அப்பாவிடம் இப்பொழுது மனம் விட்டு பேசுகிறோம்?? சரி,இது ரொம்ப கஷ்டமான கேள்வி, இப்போ வேற கேட்குறேன்.நம்மில் எத்தனை பேர் அம்மாவிடம் பேசும் அளவிற்க்கு அப்பாவிடம் பேசுகிறோம்???.அட்லீஸ்ட் அதில் பாதி?? ஹ்ம்ம்ம் ,மனம் இந்த கேள்வியை ஏற்க்க மறுக்கிறதா? .அப்படி என்றால் இதை தொடர்ந்து படியுங்கள்.

 

அம்மாவின் அரவணைப்பு ,நாம் கருவறையில் துளிர்க்கும் பொழுதே ஆரம்பிக்கிறது.ஆனால் அப்பாவின் பாசம்??,நம் அம்மாவை தன் மனைவியாக ஏற்க்கும் அந்த நிமிடம் ,“நம்ம பையன ,பொண்ண,நல்ல ஸ்கூல்ல சேர்க்கனும்”,என்று கூறும் பொழுது தொடங்குகிறது.அது தான் ஒரு தந்தை தன் குழந்தையை எண்ணி காணும் முதல் கனவு!! .அந்த கனவிற்கு நாம் தகுதி ஆனவர்களா??? .நம் அம்மா கர்பிணியாக இருக்கும் பொழுது,அவள் எடுக்கும் வாந்தியை தன் கையில் ஏந்தும் அப்பா,நம்மை நம்மால் ஏற்படும் அவதிகளை அசிங்கங்களை சுமக்க ஆரம்பிக்கிறார்.

அம்மா மகபேறு காலத்தில் சாப்பிடும் ஒவ்வொரு பருக்கும் தன் குழந்தை செழிப்பாக பிறக்க ,என்று உணரும் நம் அப்பா ,நம் அம்மா கேட்ட அனைத்தும் வாங்கி தருகிறார்,அப்பொழுதே அவர் நமக்காக வாழ ஆரம்பிக்கிரார்.7ஆம் மாதத்தில் தாய் வீடு செல்லும் நம் அம்மா ,அப்பா எண்ணும் ஒரு ஜீவனை மட்டும் பிரிந்து செல்கிறார்,ஆனால் அப்பா??,தன் மனைவி மட்டும் தன் வாரிசு என்று இரு உயிர்களை பிரிகிறார்.அந்த பிரிவு தரும் இடைவெளியில் ஒவ்வொரு தந்தை அனுபவிக்கும் கல்யாணமான ப்ரம்மச்சாரி வாழ்க்கை மிகக்கொடுமையானது.அப்படி பட்ட அப்பாவை நாம் இன்னும் முழுவதுமாக உணரவில்லை என்பதுவே சத்தியமான உண்மை.

அம்மா, பிரசவ ஆஸ்ப்பத்திரியில்.டாக்டர் “சாரி சார்,ஆபரேஷன் பண்ணியாகனும்”,என்று கூறும் பொழுது சுற்றி இருக்கும் சொந்தகள் பதற ,நம் அப்பா நமக்காக தன் மனைவியையே பணையம் வைகிறார்..அம்மா ஐ.சி.யு வில் மறுஜென்மம் எடுக்க ,நம் அப்பா நம்மை நம் அம்மாவை எண்ணி மனதால் மறுஜென்மம் எடுக்கிறார்.

ஒன்றிலிருந்து பத்தாம் மாதம் மட்டும் நம்மை சுமக்கும் அம்மாவிற்க்கு நாம்,நம் சங்க இலக்கியங்கள் தரும் முக்கியத்துவம் ,அந்த பத்தாம் மாதத்தில் இருந்து நம் வாழ் நாள் முழுக்க நம்மை சுமக்கும் அப்பாவிற்க்கு ஏன் தரவில்லை??. “தாய் தந்தை குரு தெய்வம் …”,அப்போ அப்பாவிற்க்கு இரண்டாம் இடம் தானா???..அவர் எந்த விதத்தில் குறைந்து விட்டார்?? ,”பெற்றோர் குரு தெய்வம்”, என்று தானே இருக்க வேண்டும்??..உடம்பால் வலியை பெற்றதால் அம்மாவிற்கு முதல் இடமா?? ,அப்பொழுது மனதால் நம்மால் பல வலிகளை அனுபவிக்கும் அப்பா???.சரி இலக்கியங்களை விடுங்கள்.. நாம் இதை உணர்கிரோமா??. இல்லை.நான் இல்லை.நீங்களும் என்றால் ,அப்பொழுது நாம் இல்லை.

நாம் பிறந்ததும், நம் தந்தை முதலில் நம் அம்மாவை தான் பார்க்கிறார்.“தன்னை நம்பி வந்தவளை பணயம் வைத்ததிற்க்கு மனதால் மன்னிப்பு கேட்க்கிறார்”.நம் அம்மா “நம்ம பையன பாருங்க”,என்று கூறும்பொழுது அவள் சுமை பாதியாக குறைகிறது.அதன் பின் நம்மை இந்த உலகத்த்ற்க்கு அடையாளாம் காட்டுவது நம் அப்பாவின் கடமை.அதை அவர் சரியாக செய்கிறார்.ஆனால் நாம் அவரை சரியாக புரிந்து கொள்கிரோமா???.

நான் நிறைய குழந்தைகளை பார்த்து இருக்கிறேன்,என் அண்ணன் பொண்ணு கூட தான்,”தாயை பார்க்கும் வரை அழும் குழந்தை ,அவளை பார்த்தால் அழுகையை நிறுத்தும் ,ஆனால் தந்தையை பார்த்தால் மட்டுமே சிரிக்கும்”. அன்றிலிருந்து இன்று வரை நாம் விளையாடும் பொம்மை நம் அப்பா.அந்த பொம்மையின் சந்தோஷம் நமக்கு முக்கியம் இல்லை,நம் சந்தோஷம் தான் நமக்கு முக்கியம்..எத்தனை சுயனலவாதிகள் நாம்??.

நம்மை நல்ல பள்ளியில் சேர்க்க அப்ளிகேஷன் வாங்க ஸ்கூல் ஸ்கூலாக அலையும் பொழுது ஆரம்பிக்கிறது அப்பா என்னும் சுவர் சரிய…அது நாம் நம் வாழ்க்கையில் உள்ள படிகளை தாண்ட தான் என்பது நமக்கு எப்பொழுதும் புரிவதில்லை.நாம் புரிந்துகொள்ள விளைவதும் இல்லை.”ஏங்க இந்த ஸ்கூல ஏன் சேர்த்தீங்க?? பக்கத்துல குறிஞ்சி ஸ்கூல் நல்லா இருக்கும்ல??”,என்று கேட்க்கும் அம்மாவிடம்,”நீ கொஞ்சம் சும்மா இரு,இந்த ஸ்கூல்ல தான் நமக்கு தெரிஞ்ச மல்லிகா பொண்ணு டீச்சரா வேலை பார்க்குது ,நம்ம புள்ளய நல்லா பார்த்துக்கும்,நாமலும் மத்தியானம் போய் கூட சப்பாடு ஊட்டிட்டு வரலாம்,மத்த ஸ்கூல்லலாம் ரூல்ஸ் பேசுவாங்க”,என்று வாயை அடைக்கிறார்.அது தான் அப்பா பாசம்.

நமக்கு அப்பாவின் பாசம் ஏன் புரிவதில்லை,”நம் அறியாத வயதில் பாசத்தை வார்தைகளால் ,செயல்களால் காட்டும் நம் அப்பா,நாம் வளர்ந்த பின்னர் மனதால் மட்டும் காட்டுகிறார்,அது ஏன் தெரியுமா?? நாம் கெட்டு போய் விடக்கூடாது என்று தான்”,அதுவும் நமக்கு புரிவதில்லை.

அப்பா,“நாம் ஹீரொவாக தான் வில்லனாக நடிக்கும் மனிதர்”.எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது,நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது எக்ஸாம் டைம்ல, நான் “அம்மன்” படம் பார்த்துட்டு இருந்தேன்,அப்போ கோவம் வந்து என் அப்பா என்னை காலால் உதைத்தார்,அது தான் அவர் என்னை அடித்த முதல், கடைசி அடி,அன்றிலிருந்து ஒரு மாதம் நான் என் அப்பாவிடம் பேசவில்லை,சரியாக ஒரு மாதம் கழித்து ,என் அண்ணா என்னை அடித்தான்,அதை பார்த்த என் அப்பா கோவம் வந்து என் அண்ணனை கயிறு கட்டி கிணத்தில் இறக்கி விட்டார்,அன்று தான் என் அப்பா என் மேல் வைத்துள்ள பாசத்தை நான் கண்கூடாக பார்த்தேன்.

நான் எட்டாவது படிக்கும் பொழுது பார்த்து இருக்கிறேன்,பள்ளி முடிந்த்ததும் எல்.கே.ஜி படிக்கும் தன் குட்டி பொண்ணை கூட்டிச்செல்ல ,நாலு மணிக்கு அடிக்கும் பெல்லுக்காக மூன்று மணியிலிருந்தே காத்து இருப்பார்கள்,அப்பாக்கள்.அந்த குட்டி பொண்ணு அப்பாவை பார்த்ததும் சிரிக்கும் சிரிப்பயும்,தன் பெண்ணை ஓடி போய் தூக்கி கொஞ்சி முத்தம் கொடுக்கும் அப்பாவயும் பார்க்கும் பொழுது எனக்கு எட்டு வண்ண வானவில்லை பார்த்தது போல இருக்கும்..நாமும் குழந்தயாக மாறி நம் அப்பாவை கட்டி பிடிக்கலாம் போல இருக்கும்.ஆனால் இனிமே அது நடக்காது என்று எனக்கு அப்பொழுது தெரியவில்லை.

சரி நம் அப்பாவிடம் மட்டும் ஏன் நமக்கு இவ்வளவு இடைவெளி,ஏன் அவர் எது கூறினாலும் எனக்கு கோவம் வருகிறது??,தெரியவில்லை.எல்லாம் வயது திமிர்.ஆனால் அம்மா விடம் மட்டும் எல்லாம் நான் கூறிவிடுகிறேன்,காதலில் இருந்து மோதல் வரை,ஆனால் அது அப்பாவிடம் என்னால் முடியவில்லை.

நம் அறியாத வயதில்,கடைக்கு போனால் அம்மா வீட்டுக்கு மளிகை சாமான் வாங்க ,அப்பா மட்டும் நமக்கு சாகலேட் வாங்குவார்.அப்போ அப்பாவை பார்த்து “ஐ லவ் யு” அப்பா என்று கூறிய நாம் இப்பொழுது ஏன் இவ்வளவு தூரம் தள்ளி நிற்கிறோம்?.தெரியவில்லை.

நான் பக்கத்து வீட்டு முருகேசன் அண்ணா வீட்டின் மாடியில் கல் எறிந்ததற்காக அந்த அண்ணா என்னை அடித்தார்,மெதுவாக தான்,தப்பு என் மேல் தான்,ஆனால் என் அப்பா , பத்து வருட பழக்கம் என்று கூட பார்க்காமல் அந்த அண்ணாவிடம் சண்டைக்கு போனார்.உங்களுக்கு தெரியுமா..ஏழு வருடம் ஆகிறது என் அப்பா அந்த முருகேசன் அண்ணாவிடம் பேசி..அது தான் அப்பா.அப்படி பட்ட அப்பாவிடம் ஒரு சிறிய விஷயித்தில் கூட என்னால் அனுசரித்து போக முடியவில்லை.

நான் மட்டும் அல்ல ,என் போன்ற பலர்.நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எதிர் பார்த்த மதிப்பெண் வரவில்லை.அதை பார்த்து ஊரெல்லாம் என் அம்மா புலம்பினார்.எல்லார் அம்மாவும் அப்படி தானே…ஆனால் அப்பா பார்க்கும் எல்லாரிடமும்,”நல்ல மார்க் தான்,போதும் போதும்,இப்போ கொஞ்சம் கம்மியா எடுத்தாதாம் +2ல நல்லா படிக்க முடியும் இல்லாட்டி மார்க் எடுத்துடேன்னு திமிர் வந்துடும்,என் பையன் +2ல எடுப்பான்”,என்று கூறினார்.அப்பொழுது முடிவு செய்தேன்,அப்பாவின் நம்பிக்கையை காப்பாற்ற் வேண்டும் என்று.குடும்பத்தில் ஆயிரம் பிரச்சணைகள் வந்தாலும் ,அம்மாவிடம் சண்டை போட்டு விட்டு அம்மா சமைக்க மாட்டேன் என்று கூறினாலும் ,அப்பா எனக்காக வெளியில் சென்று பரோட்டா வாங்கி வருவார்.

அப்படி பட்ட அப்பாவிற்கு பிடித்தது எது?,எனக்கும் எல்லாவற்றயும் பார்த்து பார்த்து செய்யும் அப்பாவிற்கு பிடித்தது என்ன?,பிடிக்காதது என்ன?.”விஜிக்கு கருப்பு கலர் பேன்ட் தான் பிடிக்கும்,ஆனியன் தோசைனா அவனுக்கு உயிர் “,என்று ஒவ்வொன்றயும் பார்த்து பார்த்து செய்யும் என் அப்பாவிற்க்கு பிடித்த உணவு எது??,பிடித்த கலர்??.எதுவும் எனக்கு தெரியாது.தெரியவும் இன்று வரை நான் முற்படவில்லை,ஏன்?.நேற்று வந்த நண்பனுக்கு என்ன பிடிக்கும்,தோழிக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து பிறந்த நாளன்று பரிசு வாங்கி தரும் நான்,இது நாள் வரை அவரின் ஒரு பிறந்த நாளில் கூட பரிசு குடுத்தது இல்லை என்பது கசப்பான உண்மை.

குடும்பத்தில் பிரச்சணை வரும் பொழுது அம்மா நம்மிடம் வந்து அழுவார்.ஆனால் அப்பா?,எங்கே சென்று அழுவார்?? அவரின் அழுகை கோபமாக தான் வெளிப்படும்,அந்த ஐந்து நிமிடம் நம்மை திட்டுவார்,இத்தனை வருடமாக நம்மை அனுசரித்து நமக்காக எல்லாம் செய்த அப்பவிற்காக அந்த ஐந்து நிமிடம் கூட நாம் நம் அப்பாவை அனுசரித்து போவதில்லை.

பன்னிரெண்டாம் வகுப்பு, காலை 9மணிக்கு ஆபீஸ் போன நம் அப்பா ,இரவு 7மணிக்கு தான் வருவார்.நாம் படித்து கொண்டு இருப்போம்.அப்பா வந்த களைப்பில் தூங்க மாட்டார்.எங்கே தான் தூங்கினால் அதை பார்க்கும் நம் மகனுக்கும் தூக்கம் வந்துவிடும் என்று எண்ணி தூங்க கூட மட்டார்.மாறாக நாம் படிக்கும் வரை நம் பக்கத்தில் ஒரு ஸ்டூலை போட்டு வார இதழ் படித்துக் கொண்டிருப்பார்.சரியாக 11மணிக்கு டீ போட்டு தருவார்.நாம் தூங்கிய பின்னர் தான் தூங்குவார்.ஆனால் நாம் எந்திர்க்கும் முன்னர் எந்திரித்து மார்கெட் போய் அம்மாவுக்கு காய்கறி வாங்கி வருவார்.எப்படி இவரால் இத்தனை வேலைகள் செய்ய முடிகிறது?..நம் அப்பா நமக்கு கிடைத்த வரம்.என் அப்பாவிற்க்கு நான் கொடுத்த முதல் மகிழ்ச்சி,+2 மார்க்.

 

என் அப்பாவுக்காக நாம் செய்த முதல் முயற்ச்சி.அன்று என் அப்பா பெற்ற மன நிறைவு இன்று வரை என் மனதில் இருக்கிறது.அதன் பின் என் அப்பாவிற்காக நான் எதயும் செய்யவில்லை.அம்மா என் மார்க்கை ஊர் முழுக்க சொல்ல,அப்பா கூறினார்,“சும்மா இரு,பையனுக்கு கண்ணு பட்டுட போகுது”,அது தான் அப்பா.

 

ஒரு இலக்கு இல்லாமல் படிக்கும் நம்மை ,நம் இலக்கு என்ன என்று உணர வைப்பவர் நம் அப்பா.கல்லூரி வாழ்க்கை ஆரம்பித்தது,அது வரை கொஞ்சமாவது பேசிக்கொண்டிருந்த நம் அப்பாவிடம் இருந்து நாம் பிரிய நேரிட்டது.அதன் பின் அம்மாவிடம் போனில் மணிக்ககில் பேசும் நாம் அப்பாவிடம் வாரத்தில் ஒரு முறை பேசினாலே அதிகம்.இப்பவும் கூட நாம் ஊருக்கு போனால் அம்மாவை பார்த்த உடனே கட்டி பிடித்து முத்தம் கொடுக்கிறோம்,ஆனால் நம் அப்பாவை பார்த்தால் ஒரு சிறு புன்னகை.அந்த நிமிடம் அப்பாவின் வலி நமக்கு தெரியாது,நீங்க அப்பாவான பின்ன உங்க மகனோ அல்லது மகளோ உங்களுக்கு செய்வான் அப்பொழுது புரியும் அந்த வலி,ஆனால் அப்பொழுது புரிந்து எந்த பயனும் இல்லை.

நமக்கு எழுத படிக்க சொல்லிக்கொடுத்தது நம் அப்பா,நல்லது கெட்டது சொல்லிகொடுத்தது நம் அப்பா,வாழ்க்கையை சொல்லிகொடுத்தது நம் அப்பா,ஒரு சாதாரண பேங்க் ஃபார்ம் கூட ஃபில்லப் பண்ண சொல்லிக்கொடுப்பவர் நம் அப்பா,அவரிடம் இருந்து நாம் கற்றவை அதிகம்.

தாடி வைப்பதில் இருந்து ட்ரெஸ்ஸிங்க் சென்ஸ் வரை நாம் அப்பாவிடம் இருந்து கற்றவை அதிகம்.அப்படிபட்ட அப்பாவிடம் இருந்த்து ஏன் நாம் இவ்வளவு இடைவெளி காட்டுகிறோம்??.இப்பொழுது ஆண் பிள்ளைகளை விட பெண்கள் அப்பாவிடம் பாசமாக நெறுக்கமாக இருக்கிறார்கள்.உதாரணம்..நம்ம காலேஜ்லயே விடுமுறை நாட்க்களில் கேள்ஸ் ஹாஸ்டல் பக்கம் வந்து பாருங்கள்,எவவளவு பெண்கள் தங்கள் அப்பாவிடம் நெருக்கமாக இருக்கிரார்கள் என்று.அதை பார்த்து பல நாட்க்கள் நான் ஏங்கியதுண்டு.

சரி இவ்வளவு பேசும் நான் என் அப்பாவிடம் இருக்கும் இடைவெளியை குறைக்க ஏதாவது செய்து இருக்கிரேனா?? இல்லை..எந்த சக்தி அதை தடுக்கிறது,எது என் மனதை இவ்வளவு கல்லாக மாற்றியது..ஏன் என் அப்பாவிடம் பாசம் காட்ட தயக்கம் காட்டுகிறேன்??..இதை யோசித்தால் எனக்கு தலயே வெடித்துடும் போல இருக்கிறது. என் ஆதங்கத்தை,என் போல உள்ளவர்கள் இதை படித்து தன் அப்பாவின் பிறந்த நாளுக்கு பரிசு வாங்கி கொடுக்க மாட்டார்களா?? என்று எண்ணி தான் இதை நான் எழுதினேன்.

 

நான் எதுவும் என் அப்பாவிற்க்கு செய்யவில்லை,ஆனால் இப்பொழுது கூட நான் என் அப்பாவிற்க்கு போன் செய்தால் “அப்பா நல்லா இருக்கீங்களா,என்ன சாப்டீங்க”,என்று கூற மனம் என்னும்,ஆனால் உதடு தடுக்கும்,என் உதடு கேட்பது ,”அப்பா, ஒரு 500ரூபாய் என் அக்கவுன்ட்ல போட்டு விடுங்க”, என்பது தான்.ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் எந்த அப்பாவிடம் நான் பாசம் காட்ட நான் மறுத்தேனோ,அந்த அப்பாவின் பாசம் என் பேங்க் அக்கௌன்டில் “1000ரூபாயாக”,வந்து விழும்.அது தான் அப்பா பாசம்.அவர் நம்மிடம் எதயும் எதிர் பார்பதில்லை,நாம் வாழ்க்கையில் வெற்றி பெற தான் ஒவ்வொருவரிடமும் தோற்கிறார்,நமக்காக,நமக்காக மட்டுமே. “அப்பா நாம் மெத்தையில் படுக்க ,முள் வெளியில் உழைக்கும் ஜீவன்”.முடிந்தால் உணருங்கள் அவரை.அது ஒன்று போதும் அவர் மனம் நிறைவு அடைய.

நமக்கு உலகத்தில் மிகச்சிறந்த அப்பா கிடைத்துள்ளார்,அவருக்கு நீங்கள் மிகச்சிறந்த மகனாக அல்லது மகளாக வேண்டு என்பதில்லை..ஒரு நல்ல மனிதனாக அவரை மதியுங்கள்.அது போதும்.

Comments
2 Responses to “அப்பா!!!- நாம் தாண்ட , தான் சரியும் சுவர்”
  1. சுகன்யா says:

    நன்று . ஆனால் இந்த உலகில் பாசமற்ற அப்பாவும் உள்ளார்கள் என்பதை மறந்து விடாதே..

  2. இந்த உலகில் மிருக வெறி கொண்ட அப்பாக்கள் இருக்கிறார்கள் ..ஆனால் பாசம் இல்லாத அப்பா இல்லை..அவரின் கண்டிப்பு என்றைக்கும் நமக்கு பாசமாக தெரியாது,என்பதை தான் நான் இங்கே கூறியுள்ளேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: