பேபி அக்காவின் தற்கொலை!!??

இங்கே நான் யாருக்கும் அறிவுரை கூறப்போவதில்லை.இங்கே நான் யார் தவறையும் சுட்டிக்காட்ட போவதில்லை.எனக்கு தெரிந்தது,என் காதுக்கெட்டியது,நான் பார்த்தது அதன் பதிவிது.

இறந்தவர்கள் எழுந்துவந்து கூறும் வரை அவர்கள் இறந்ததன் காரணம் தெரியப்போவதில்லை.எனக்கும் பேபி அக்கா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று சரியான காரணம் தெரியவில்லை.வாருங்கள் தேடலாம்.

நான் அப்பொழுது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் என்று நியாபகம்.அன்று காலை நான் சயின்ஸ் பரீட்ச்சைக்கு படித்துக்கொண்டிருந்தேன்.திடீரென்று போன் அடித்தது.

அம்மா சமையல் செய்துட்டு இருந்தாங்க.நான் தான் எடுதேன்.அந்த
பக்கம் பெண் குரல்,எனக்கு பரீட்ச்சயம் இல்லாத பெண் குரல்.
“விஜி,போன அம்மாகிட்ட குடு…”,ஒரு வித பதட்டம் அந்த பெண்ணின் குரலில்.

“அம்மா போன்..உனக்கு தான்…”

“வரேன் டா…”

“ஹெல்லோ,யாரு…”

“….”, நான் அம்மாவயே பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவர் முகத்தில் கொஞ்சமும் சலனம் இல்லை. அம்மா போனை வைத்தார்கள்.எதுவும்
பேசவில்லை.

“விஜி இன்னைக்கு ஒரு நாள் தோசை கொண்டு போறியா??”

“என்னமா ஆச்சு?”

“பேபி அக்கா தூக்கு போட்டுகிச்சாம்டா…”

“யாருமா அது பேபி அக்கா??”

“உனக்கு தெரியாதுடா..சின்ன வயசுல பார்த்து இருப்ப..அழகா இருக்கும்டா..நல்ல  திறமையான பொண்ணு..போன வாரம் கூட ஹின்டு பேப்பர்ல அது குடுத்த பேட்டிலாம் வந்துச்சுடா..எதோ ஷேர் மார்க்கெட் ஆமே…”

“ஆமா சொல்லுமா..”

“அதுல நல்லா திறமையான பொண்ணாம்டா…ஏன் இப்படி பண்ணுச்சுனு தெரியல டா…”

அம்மா சொல்லில் ,தன் உறவுக்கார பெண் இறந்தாள் என்பதை விட, ஒரு திறமையான பெண் இறந்தாள் என்ற தவிப்பு அதிகமாக இருந்தது.

“சரிம்மா..நீ போயிட்டுவாமா..நான் பார்த்துகுறேன்.”

நான் பள்ளிக்கு கிளம்பிவிட்டேன்.அன்றைக்கு பரீட்ச்சை என்பதால் என் கவனம் பேபி அக்காவிடம் செல்லவில்லை.

சாயுங்காலம் 7 மணி.நான் வீட்டுக்கு வந்துவிட்டேன்.அம்மா இன்னும் வரவில்லை.எனக்கு கோபம் வரவில்லை.மாறாக பேபி அக்காவிடம் மனம் போனது.

“யாரது பேபி அக்கா??…. நான் பார்த்து இருக்கிறேனா??”.

என் மனம் பேபி அக்காவின் உருவங்களை அலச ஆரம்பித்தது.

“ரெண்டு மாசம் முன்னாடி ஒரு கல்யாணத்துல அம்மாவிடம் ரொம்ப நேரம் பேசுனாங்களே ..அவங்களா???”,இல்லை,அவங்க ரொம்ப வயசான மாதிரி இருந்தாங்க….

நியாபகம் வந்துவிட்டது..பெரியப்பா கிட்ட அடிக்கடி போனில் பேசுவாங்களே அவங்களா???”..இருந்தாலும் இருக்கும்..

ஆனால் அவங்க முகம் நியாபகமில்லை..பார்திருக்க மாட்டேன் என்று
நினைக்கிறேன்..யோசிப்பது வீண் வேலை.

அம்மாவுக்கு கால் செய்தேன்.

“அம்மா எப்போ வருவ..பசிக்குது…”

“விஜி இன்னும் ரெண்டு மணி நேரத்தில் வரேண்டா..”

“பாவி மனுஷி எட்டு வயசு பையன இப்படி தவிக்க விட்டு போய்டாளேடா….”

“என்னமா சொல்ற…பேபி அக்காவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா”.

“அவ பையன் தாண்டா கொள்ளி வச்சான்…எனக்கு மனசே கேட்கல டா….”

நான் பேசவில்லை…

“விஜி….”

“சரிம்மா…நீ ..வா..நான் பார்த்துக்குறேன்.”

எனக்கு பேபி அக்காவின் மேல் கோவம் கோவமாக வந்தது.எப்படி அந்த அக்காவுக்கு மனது வந்தது..அதுவும் எட்டு வயது பையனை விட்டு செல்ல..

நல்ல வேளை அந்த பையனுக்கு அவன் அப்பா இருக்காங்களே..நல்லா
பார்த்துப்பாங்க.என் மனம் லேசாகியது. தோசை சுட்டு சாப்பிட்டேன்.

அம்மா 10.30 வந்தார்.

“விஜி சுடு தண்ணி வைடா..”

“சரிம்மா..”

அம்மாவிம் புலம்பல்கள் ஆரம்பித்தன..

“கொஞ்சம் ஆவது அவளுக்கு மனசாட்ச்சி இருக்கா???..அந்த பையன இப்படி “அனாதயா” விட்டுட்டு போய்ட்டாளே”

எனக்கு தூக்கி வாரிப்போட்டது.

“என்னமா சொல்ற.அனாதயா..அவன் அப்பா??”

“அவர் செத்து ஒரு வருஷம் ஆச்சுடா..”

“எனக்கு ஒரு மாதிரி இருந்தது..பேபி அக்கா மேல் கோபம்…அந்த பையன்
வாழ்க்கை??”…என் மனம் என்றைக்கும் இல்லாமல் அன்றைக்கு ஒரு எட்டு வயது பையனை நினைத்து வருத்தப்பட்டது.

“அந்த பையன் கொழுக்கு மொழுக்குனு இருந்தாண்டா.நால்லா சொகுசா வளத்தி இருக்காடா…பார்கவே பாவமா இருக்குடா..பேசாம அவன நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு
வந்துடலாம்னு இருந்தேண்டா..”

“வரவேண்டியது தானம்மா??”

“அட நீ வேற..அந்த பொண்ணு ஷேர் மார்கெட்லலாம் நல்லா பண்ணி நெறையா சொத்து சேர்த்தி வச்சு இருக்கனால..அந்த பையன பார்த்துக்க அவன் அம்மா வீட்டு சைடும் அப்பா வீட்டு சைடும் அடிச்சுகுறாங்கடா..”

“கருமம்….அங்க கூட்வா இப்படி பண்ணுவாங்க??…சரி அந்த பையன் என்ன சொன்னான் ??”

“விஜி..அந்த பையன் சொன்னத என் வாழ் நாள்ல மறக்க
முடியாதுடா..”

“என்னமா சொன்னான்???”

“அவன் ,பேபி அக்கா மூஞ்சு முன்னாடி போய் நின்னுட்டு கொள்ளி வைக்கும்
முன்னாடி…“கோழை..வாழ தைரியம் இல்லாத கோழை”..அப்படினு சொன்னாண்டா..”

“என்னது எட்டு வயசு பையன் எப்படிமா இப்படி பேச முடியும்..??”

“அவன் எங்கடா பேசுனான்??..அவ பேச வச்சுடா..இந்த வாழ்க்கை அவன பேச வச்சதுடா..இனி அந்தபையன் இழக்க ஒன்னும் இல்லடா..எல்லா துன்பத்தயும் அவன் அனுபவிச்சுடான்..இந்தசின்ன வயசுல..

“அப்புறம் என்ன ஆச்சுமா…என்ன நடந்தது அங்க…??”

“அவ்ளோ தாண்டா..போய் படி போ…” அம்மா குள்ளிக்க போய்விட்டார்.

என் மனம் அந்த பையன் வாழ்க்கை நினைத்து வருந்தியது..

“இனிமே அவனுக்கு யார் மதியானம் சாப்பாடு கொடுப்பாங்க?? இனிமே யாரு அவன ஹோட்டெல்க்கு கூட்டிட்டு போவாங்க?? இனிமே யாரு அவன் ப்ரோக்ரஸ்
ரிபோர்ட்ல சைன் போடுவாங்க?? இனிமே யாரு அவன் கேட்டது எல்லாம் வாங்கி தருவாங்க?? இனிமே யாரு அவன தேர் கடைக்குலாம் கூட்டிட்டு போவாங்க…” “ஒருவனின் பால்யம் தான் அவன் வாழ்கையின் மகிழ்ச்சியான காலம்..ஆனால் அதை அவன் இப்படி அனுபவிக்க முடியாமல் ….ஹ்ம்ம்ம்ம்”.

“அவள் மகிழ்ச்சியாக போய்விட்டாள்..இவன்
வாழ்கையை பணயம் வைத்து.

ரெண்டு நாள் ஆச்சு..அம்மாச்சி வந்தாங்க.பேபி அக்காவின் அத்தை முறை.அம்மாவிடம் புலம்பி தீர்த்து விட்டு என்னிடம் வந்தார்.

“விஜி நல்லா படிக்குறியாடா??”

“அத விடு அம்மாச்சி…பேபி அக்கா ஏன் தூக்கு போட்டுச்சு?? அத சொல்லு முதல்ல..”

“சொல்றேன் இருடா..அப்புறம் பயபடக்கூடாது..”

“நான் நெறையா இங்கலீஸ் பேய் படம் பார்பேன்..நான் பயப்பட மாட்டேன் நீ சொல்லு.”

“ஒரு வருஷம் முன்னாடி பேபி அக்கா புருஷன் ஒரு ஆக்சிடென்ட்ல படுத்த படுக்கை ஆகிடான்.அவன் ஒரு வாரம் ஹோஸ்பிட்டல இருந்தான்.அதுக்கு முன்னாடி ரெண்டு பேரும்
என்னா அழகா சொகுசா வாழ்தாங்கடா..பையன ராஜா மாதிரி பார்த்துகிட்டாங்க. அந்த பொண்ணு ஏறாத கோவில் இல்ல..ஆனா அவன் பொழைக்கல..

ஆனா அவனுக்கு அவன் பொண்டாட்டினா அவ்ளோ உசுறு..சாகும் போது அவன்
சொன்னது கேட்டு நான் அந்த் பொண்ண கூட்டிட்டு வெளிய வந்துட்டேன் டா..”

“அப்படி என்ன சொன்னாரு அவரு..”

நான் செத்தா..நீயும் எங்கூட வந்துடு பேபினு சொன்னாண்டா…”,நான்
பதறிடேன்.

“அப்புறம்…”.

“சொல்லிடு அவன் போய் சேர்ந்துட்டான்”.

“ஆனா அந்த புள்ள நல்லா தைரியமா தாண்டா இருந்துச்சு..நல்லா சம்பாரிச்சது…அவ புருஷன் செத்த பின்னாடி கூட நல்லா சம்பாரிச்சு அந்த பையன நல்லா பார்த்துகிட்டாடா..சென்னைல கூட ப்ளாட்லாம் வாங்கி போட்டா..ஊரே அவ மேல கண்ணு வச்சது.”
ஒரு வாரம் முன்னாடி அவ வீட்டுக்கு போனேண்டா…அங்க நடந்தது எல்லாம் எதோ தப்பா பட்டுச்சுடா எனக்கு.அந்த புள்ள சொன்னது எனக்கு தூக்கி வாரிபோடுச்சுடா…”

“என்ன ஆச்சு சொல்லு..”

அவ சொன்னா..”அத்தை இப்போலாம் அவர் என் கனவுல வந்து என்னயும் அவர் கூட வரசொல்லி கூபிடுறார் ..நான் போகவா” நு கேட்டா.

“என்ன அம்மாச்சி சொல்றா??..உண்மயா??”

“சத்தியமாடா…”

ஆனால் அம்மாச்சி சொல்வதில் உண்மை இருக்கும் போல்தான் தோன்றியது..ஏனென்றால் ஊரில் அம்மாச்சி கொஞ்சம் சாமி வேலைகள் பண்ணும்,அடிக்கடி சாமி வந்து ஆடும்..பேய்
வெரட்ட திருனீருலாம் குடுக்கும்.

“சரி மேல சொல்லு..”

“நான் அவள சமாதானம் பண்ணிட்டு சாமி மந்திரம் சொல்லி அன்னைக்கு நைட் அவுங்க வூட்டுல தான் தூங்குனேன்..”

“நைட் ஒரு 1.30 இருக்கும்..நான் பாத்ரூம் போக எந்திரிச்சேன்…அப்போ பொடக்காலி(பாத்ரூம்) கதவு பின்னாடி ஒரு சப்த்தம்.

“அம்மாச்சி…..”

“என்ன பயமா இருக்கா…”

“இல்ல இல்ல சொல்லு..”

“கதவ திறந்து பார்தா பின்னாடி ஒரு கருப்பு நாய் டா….”

“அது அழுதுட்டு இருந்துச்சு…நான் அது கண்ணுல ஏக்கத்த பார்தேன்…”

“என்ன அம்மாச்சி சொல்ற..நாய் அழுமா??”

அது நாய் இல்லடா அவ புருஷன்…அவன் தான் அவள கூட்டிட்டு போக நாய் ரூபத்துல வந்து இருக்கான்….”

என்னால் நம்பவும் முடியவில்லை…நம்பாமல் இருக்கவும்
முடியவில்லை…

“நான் அவன விரட்டுனேன்..மந்திரம் சொன்னேன்..அப்புறம் தான் போனான்…அந்த புள்ளய மயக்கி கூட்டிட்டு போக பார்த்து இருக்காண்டா..”

படிக்கும் உங்களுக்கு காமெடியாக இருக்கலாம்..ஆனால் இது தான் நடந்தது..நம்புவதும் நம்பாமல் போவதும் உங்கள் இஸ்டம்.

“ஆனா அந்த புள்ள எப்படியோ அந்த மாய வலைல விழுந்த்துச்சுடா விஜி…அவ புருஷன் இவள விடல..அவன் மேல இவ வச்ச பாசம் ,அந்த எட்டு வயசு பையன பத்தி கூட
நினைக்காம அவ புருஷன் கிட்ட போய்ட்டா..” இது அம்மாச்சி
சொன்னது.

எப்படி அந்த அக்காவுக்கு அவ்ளோதைரியம்??..

சாதாரண பிளேட் கிழிச்சாளே அவ்ளோ வலிக்கும்.ஆனா எப்படி அந்த அக்காவால முடிஞ்சது??..தூக்கு போடுறது ஒரு பெரிய வேலை..டக்குனு போட முடியாது.

கைற எடுத்து,அத மாட்டி,ஸ்டூல் போட்டு..இவ்ளோ பண்ணும் போது கொஞ்சம் கூட வங்க பையன பத்தி அந்த அக்கா நினைக்கலையா?? அப்படி என்ன அவங்கள தூக்கு போட வச்சு இருக்கும்??.எந்த சக்தி அவங்களுக்கு அவ்ளோ தைரியம் குடுத்து இருக்கும்?? அந்த அண்ணன் மேல அந்த அக்காவுக்கு அவ்ளோ காதலா?? இருந்தாலும் அந்த பையன பத்தி கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம்.அந்த அக்கா ஒரு நொடியில் எடுத்து முடிவு அந்த பையனின் வாழ்க்கையை மாற்றிப்போட்டு விட்டது.அப்புறம் காலப்போக்கில் நான் அதை
மறந்து விட்டேன்.அந்த எண்ணங்கள் அண்ணா ஹஜாரே
கூட்டம் போல கலைந்தது.

காலம் உருண்டு ஓடியது..இன்று காலை பெரியப்பாவிற்க்கு
கால் செய்தேன்.

“சொல்றா விஜி..”

“பெரியப்பா செலவுக்கு காசு இல்ல…”

“சரிடா நாளைக்கு போடுறேன்..”

“இன்னைக்கே போடு..”

“டேய் ஒரு எழவுக்கு வந்து இருக்கேண்டா”

“உனக்கு மட்டும் எங்க இருந்த தான் எழ்வு கல்யாணம்லாம் வரும்னு
தெரியல..”

“நம்ம முருகன் பொண்டாட்டி தூக்கு போட்டுகிச்சுடா…”

எனக்கு பேபி அக்கா நியாபகம் வந்தது…

“விஜி….”

“சரி மெதுவா போடு ..அவசரம் இல்ல”

அம்மாவுக்கு கால் செய்தேன்..

“அம்மா யாரு அந்து முருகன் பொண்டாட்டி…??”

“என்னடா எடுத்தவுடனே கேட்குற..??”

“நீ சொல்லுமா…”

“முருகனும் அவன் பொண்டாட்டியும் லவ் பண்ணி தான் கலியாணம் பண்ணாங்க…”

“அதை விடு..அவங்களுக்கு பையன் பொண்ணு யாராவது இருக்காங்களா??”

 “ஆமாடா..ஒரு பையன் ஆறு வயசு…”

“ஐயோ கடவுளே……ஏன்மா இப்படி பண்றாங்க..சாகுறவங்க அந்த பையன பத்தி கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாங்களா??”
“ஏன் இவ்ளோ சுயனலவாதியா இருக்காங்க..”

“ஆமாடா..இதை விட கொடுமை என்னடானா அந்த பையனுக்கு அவ்ங்க அம்மா இறந்துட்டாங்கனு சொன்னா புரியலடா..அவன் பாட்டுக்கு ஒரு பெட்டி கடை முன்னாடி போய் நின்னுட்டு இருக்குற மிட்டாய்லாம் எடுத்து பாக்கெட்ல போட்டுகிட்டான்.…பெரியப்பா தான் “பாவம் இந்த பையன் , எப்படி தான் இப்படி புள்ளய பெத்துட்டு அனாதையா விட்டு போக தோனுதோ தெரியலை ,அவன் கேட்குறத குடுங்க” நு சொல்லி வாங்கி குடுத்து இருக்காரு.அம்மா செத்தத கூட அறியாத புள்ளய விட்டுட்டு போய்டாடா…”

“இப்படி தான் பேபி அக்கா புள்ள இப்போ அனாதையா சுத்திட்டு இருக்கு…”

“பேபி அக்கா..அந்த எட்டு வயசு பையன்??..என்னமா பண்றான் இப்போ??”

“அவன் இப்போ +1 படிக்குறாண்டா…”

“அவன ,அவன் அம்மா சைடு சொந்தக்காரங்க தான் பார்த்துகிட்டாங்க..அப்புறம் அவன வச்சு
மேய்க்க முடியலனு அவன் தாத்தா வீட்டுக்கு அனுப்பிவிட்டாங்க..இப்போ அவன் தாத்தா உடம்புக்கு முடியல,அவன்,அவன் அப்பா சைடு சொந்தக்காரங்க வீட்டுக்கு அவங்க தாத்தா
போக சொல்லிக்காரு அதுக்கு இவன் ,

“நான் போன பின்னாடி நீ செத்துட்டா என்ன பண்றது..சொத்தை என் அத்தை பேருல
எழுதி வை ,நான் 18 வயசு ஆன பின்னாடி என் பேருக்கு மாத்திகிறேன்”,சொல்லி இருக்காண்டா.”

“அவரும் எழுதி வச்சுட்டாருடா..இப்போ சென்னைல எங்கயோ தாம்பரத்துல
இருக்குறதா கேள்வி பட்டேண்டா…”

“ஏன்மா யாரும் அவன் மேல பாசம் காட்டலயா?? “

“இல்லடா அவன் அத்தை,அவன் தாத்தா எல்லாம் இவன் மேல உயிரயே வச்சு
இருக்காங்கடா..ஆனா அவன் உயிரா நேசிச்ச அம்மா அப்பாவே இவன அனாதயா விட்டு போன பின்னாடி யாரு மேலடா இவனுக்கு பாசம் வரும்…பாசம் எல்லம் மழுங்கி போய்
இருக்கும்டா..”.அம்மா சொல்வதும் உண்மை தான்.

பாசம் எல்லாம் அவனை ஏம்மாற்றிவிட்டது.இனி அவன் தப்பான வழிக்கு போனால் அவனை திருத்த யார் இருக்கிறார்..அவன் வாழ்க்கை எங்கேயும் திரும்பலாம்..ஆனால்
அவை எல்லாவற்றிக்கும் காரணம் பேபி அக்கா.

“என் மனதில் ஒரே கேள்வி….”

“யாரிடம்…??”

“பேபி அக்காவிடம்…”

“அக்கா நான் உங்களை பார்த்ததில்லை,உங்கள் பையனை பார்த்தது இல்லை,ஆனால் என்னாலயே,ஒரு மூன்றாம் மனிதனான என்னாலயே உங்க பையன நினைச்சு இவ்ளோ வருத்த பட முடியுது..ஆனா நீங்க?? அக்கா அட்லீஸ்ட்,நீங்க தூக்குல தொங்குன அந்த சில நொடிகள் உங்க பையன நினைச்சீங்களா?? சொல்லுங்க ..அப்படி நினைச்சு நீங்க, “தற்கொலை ஏண்டா பண்ணோம்னு” அந்த ஒரு நொடி வருத்த பட்டீங்களா…சொல்லுங்க…??” என் கேள்வி காற்றில் பறக்க ,எதிர் படும் முகங்கள் அனைத்தும் பேபி அக்கா பையன் போல
தோன்றியது எனக்கு.

“தற்கொலை செய்பவர்கள் உண்மைலயே கோழைகள் தான்..அவர்கள் சுயனலவாதிகள்..தான்
மகிழ்ச்சியாக போய் சேர்ந்துவிட, இங்கே அனைவரும் துக்கதில்.”

Comments
4 Responses to “பேபி அக்காவின் தற்கொலை!!??”
 1. ramanans says:

  கண நேரத்தில் எடுக்கப்படும் முடிவு தற்கொலை. சுயநலத்திற்காக மட்டுமல்ல; பிறரை பழிவாங்கவும் கூட சிலர் தற்கொலை முடிவினை எடுப்பதுண்டு.

  • பிறரை பழிவாங்க வேண்டும் என்று நினைபவர்கள் அவர்கள் முன் வாழ்ந்து காட்டவேண்டும் தவிர இப்படி தன்னை தானே அழித்து கொள்ளக்கூடாது என்பது என் கருத்து தலைவா.

   • ramanans says:

    உண்மைதான். ஆனால் அப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்றே நான் சொல்ல வருகிறேன். மற்றபடி உங்கள் நடை மிகவும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். 🙂

 2. மிக்க நன்றி…. நான் எழுத ஆரம்பித்து சிறிது நாட்கள் தான் ஆகிறது .அதற்குள் உங்களை போன்றவர்கள் பாராட்டும் பொழுது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது,மிக்க நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: