கடல்,ஏரி,ஆறு மற்றும் நாங்கள் – (A Trip To Pulicat Lake)

இந்த டிராபிக்,கம்ப்யூட்டர்,லேப்டாப்,தூசு ,குப்பை இது எல்லாம் இல்லாத ஒரு இடத்துக்கு போகணும்.அதுவும் ஒரே நாள்ல போயிட்டு வரணும்,அதுவும் 500 ரூபாய்க்கு மேல செலவு ஆகக்கூடாது. மாசக்கடைசியில கைல கொஞ்சமா காசு வச்சு இருக்கும் போது இப்படிலாம் தோண தான் செய்யும்.

புலிகாட்
சரி நெட்ல பார்போம்னு பார்த்தா , “புலிக்காட் ஏரி ,இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி” ,இப்படின்னு போட்டு இருந்துச்சு.சரி இதை பற்றி படிக்கலாம்னு “பழவேற்காடு ஏரி”( ரெண்டும் ஒன்னு தானுங்க) சர்ச் பண்ணா…”பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்து 25 பேர் மரணம்“னு போட்டு இருந்துச்சு.
என்னடா,ஆரம்பமே இப்படி ஸ்லிப் ஆகுது,வேற ஏதாவது ட்ரை பண்ணலாமானு யோசிச்சோம்.எதுவும் கிடைக்கல.சரி இங்கயே போவோம்னு சனிக்கிழமை இரவு மூணு வண்டிக்கும் பெட்ரோல் போட்டு ரெடி பண்ணி,ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூணு மணிக்கு ,நான் ,சேகர்,ஸ்ரீராம்,சுபாஷ் மற்றும்
ஷங்கர், வண்டிய ஆணடவன கும்புட்டு திருநீருலாம் பூசிட்டு கிளப்புனோம்.

கைல ஒரு சின்ன பேப்பர் ,அதான் எங்க ரூட் மாப். கூகிள் மாப்பில் திருவான்மியூரில் இருந்தது புலிகாட் 74 km என்று போட்டு இருந்துச்சு.அதிகாலை பனி,ரோடும் தெரியல ஒன்னும் தெரியல,இதுவரைக்கும் பார்காத ரூட் , ஆறு மணிக்கு மேல கண்ணு தெரியாத கௌண்டமணி காமெடி மாதிரி நானும் கஷ்டப்பட்டு
வண்டிய ஓட்டுனேன்.நாங்க போட்ட ரூட் படி போகாம தப்பான வழியில போய்டோம்,அதனால சூரிய உதயம் புலிகாட்ல பார்க்க வேண்டியத நாங்க பொன்னேரியில் பார்த்தோம்.எனக்கு அது ரொம்ப புதுசா இருந்துச்சு.தினமும் பத்து மணிக்கு எந்திரிக்கும் என்னைபோல ஆளுக்கு ,அழகிய வயல்வெளியில்
சூரியன் உதிக்கும் முன் அந்த இளம்சிவப்பு கதிர்கள் வயல்வெளியில் படும் போது ,எனக்கு ஏதோ வேற்று உலகத்தில் இருப்பது போல இருந்துச்சு.

WP_20131222_007

74kmல போய் சேரவேண்டிய இடத்துக்கு 100 km ஒட்டி போய் சேர்ந்தோம்.அங்க போற வழியில வழி கேட்டோம்,அப்போ ஒருத்தர் எங்களுக்கு பெருசா ஏமாற்றத்தை கொடுத்தார் .

தம்பி,இங்க வேடந்தாங்கல் மாதிரி பறவைகள நீங்க நின்னு பார்க்க முடியாது ,நீங்க போட் எடுத்துட்டு அதுங்க இருக்குற எடத்துக்கு போய் பார்க்கணும்

மத்தியானமே ஊர் திரும்பலாம்னு நினைச்ச எங்களுக்கு,”இன்னைக்கு இங்க தான் டேரா போல“னு முடிவு பண்ணி சரி படகு ரெடி பண்ணுங்கனு சொன்னோம்.

“தம்பி சாப்பாடு ரெடி பண்ணவா? கடல் இறால்,நண்டு க்ரேவி ,சாப்பாடு ,செஞ்சு குடுக்குறோம்,படகு ஒரு நாள் முழுக்க நீங்க சொல்ற எடதுக்குலாம் போகும்,
1000 ரூபாய் படகுக்கு,சாப்பாடு நீங்க பொருள் வாங்கி குடுத்துடுங்க“.

மற்றவர்களை விட இது ரொம்ப குறைவாக தோணியது,சரி என்று “இறால் ,நண்டு,அரிசி,எண்ணெய்” என்று எல்லாம் நாங்களே வாங்கி குடுத்தோம்.எல்லாம் உயிருடன் எக்ஸ்போர்ட்கு ரெடி ஆகிக்கொண்டு இருந்த உயிர்கள்.நாம ஊர்ல சாப்டுறது எல்லாம் ஊசி போட்டு குளங்களில் வளர்க்க படும் chemical உயிர்கள்,இங்க இருக்கிறது எல்லாம் சுத்தமான கடல் உயிர்கள்னு சொன்னாங்க.

DSC_0063
எங்கள் படகு பயணம் ஆரம்பம் ஆகியது.மொத்தம் ஆறு பேரு ,படகோட்டியும் சேர்த்து.முதலில் நாங்கள் சென்ற இடம் “சவுக்குத்தோப்பு”.

 

soukkuthopu

எங்கள அந்த சவுக்குத்தோப்பில் இறக்கி விட்டுவிட்டு படகு சாப்பாடு கொண்டு வர போய்டுச்சு.நாங்க அஞ்சு பேரு ஏதோ தீவுல இருக்கிறது போல இருந்தோம்.அங்க நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டமல வேலை செய்றவங்க சவுக்கு செடி நட்டு வச்சுட்டு இருந்தாங்க..வார்த்தைக்கு வார்த்த “தம்பி செடிய மிதிச்சுடாதீன்கப்பா”னுசொன்னாங்க.

அந்த மனுஷங்க ரொம்ப வித்தியாசமா தெரிஞ்சாங்க.அந்த தீவுல கொஞ்சம் நேரம் ஆடிட்டு அந்த சவுக்குதோப்பில் உள்ள போய் ,நாங்க எல்லாம் தூங்கிட்டோம்.கடல் அருகில்,ஒரு தோப்பில் எந்த சப்தமும்,தொந்தரவும் இல்லாம ,நிம்மதியான தூக்கம்.

அப்புறம் ஒரு மணிநேரம் கழித்து படகு வந்தது,அதில் ஏரி “முகத்துவாரம்” நோக்கி சென்றோம், அது ஒரு 7km கிட்ட இருக்கும்.வெயில் தாங்க முடியல,பசி உயிர் போகுது,எப்போடா அங்க போய் சேருவோம்
வந்தக்கு ஒன்னும் பார்க்கலையே ,சாப்பிடயாவது செய்வோம்னு நாங்க பொலம்பிட்டு இருக்கும் போது ,ஒரு அழகிய காட்சிய காண நேரிட்டது.

அந்த காட்சிய விவரிக்கும் போது ,எனக்கு திரும்ப அங்க நான் இருப்பது போல ஒரு உணர்வு, அன்

“ஏரியின் நடுவில் கோடு போல அழகிய திட்டு ,தூரமா இருந்தது பார்க்கும் போது வெள்ளை பற்க்கள் வரிசயா இருப்பது மாதிரி..படகை அந்த பக்கம் நோக்கி போக சொன்னோம்..எல்லாரும் கைல கேமராவ வீடியோ மோடில் மாற்றி அந்த அழகிய காட்சிய பார்க்க தயாரானோம்…நாங்க கிட்ட நெருங்க நெருங்க அந்த பற்கள் ,பறவைகளா மாறியது,அவை ஒன்றாக சேர்ந்து பறக்க ஆரம்பிச்சது..அந்த அழகு இன்னும் கண்ணுக்குள்ல இருக்கு.” நீல நிற ஏரியில் அவை அழகாய் பறந்த அழகை நான் எடுத்த வீடியோவில் பதிவு செஞ்சி இருக்கேன்.அதை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

நாங்க முகத்துவாரம் அடைந்தோம்,இன்னும் நிறைய ஆச்சரியங்கள் எங்களுக்காக waitingல இருந்துச்சு.அங்கே இறங்கி உடனே செய்த முதல் வேலை ,சாபிட்டோம்.அவனைக் செஞ்ச அந்த இறால்
உணவு ருசி இன்னமும் என் நாக்குல இருக்கு.

This slideshow requires JavaScript.

 

அந்த படகோட்டி இன்னொரு ஆச்சரியமும் குடுத்தார், “அத்திப்பட்டி” ,ஞாபகம் இருக்கா? citizen படத்துல தல அஜித் கேப்பார்ல? அதே அத்திப்பட்டி!! அது நாங்க உக்காந்து சாப்பிட்ட அதே இடம் தான்.துளி குப்பை இல்லாம, அயர்ன் பண்ண மாதிரி இருந்துச்சு.அந்த அத்திப்பட்டி ,நடுவுல ஒரு 500 மீட்டர் இடைவெளி,ஒரு பக்கம் கடல் ,ஒரு பக்கம் ஏரி,முனையில் முகத்துவாரம் “அது ஏரி,கடல்,ஆறு
மூனும் சங்கமிக்குற இடம்” ,அங்கே ஈர்ப்பு விசை அதிகமா இருக்கும் அங்க மாட்டி தான் அந்த படகு விபத்து நடந்தது.அதானால நாங்க படக கொஞ்சம் தூரம் தள்ளி நிறுத்திட்டு நடக்க ஆரம்பிச்சோம்.

அத்திப்பட்டியில் நாங்கள்….

WP_20131222_035

யாரும் இல்லாத தீவில் தனியா இருக்குற மாதிரி சுத்துனோம்,எங்க பார்த்தாலும் தண்ணீர்.நீல வானம்!!!.

போட்டோ ,வீடியோலாம் எடுத்துட்டு, முகத்துவாரம் ல கொஞ்சம்மா காலை நினைச்சோம்.மூன்று வேறு வேறு நீர் நிலைகள் சந்திக்கும் இடம்..அங்க நான் என் கால்களை நினைதேன்னு நினைக்கும் போதே பரவசமா இருக்கு.

திரும்பும்போது வித விதமான கடல் உயிரினங்கள்,இது வரைக்கும் நான் discovery channel மட்டும் பார்த்த ஒரு விஷயம் நேர்ல பார்த்தேன்,

“ஒரு அழகிய கடல் ஓடு உயிரனம், தன் சிவப்பு கால்களை வெளியே நீட்டும் அழகை நீங்களும் பாருங்”.

அப்புறம் படகை எடுத்துக்கொண்டு பறவைகள் சரணாலயம் நோக்கி சென்றோம்.இது இன்னும் கொஞ்சம் தூரம்.மதிய நேர வெயில்,பறவைகள் ஒன்றும் இல்லை.அவை விடிய காலை 5 டு 7 அல்லது மாலை 5 டு 6 தான் இருக்கும்னு சொல்லிடாங்க.

சரி கெளம்பலாம்னு படகை திருப்புனோம்,அப்போ ஒரு காட்டு நடுவே ஒரு “view point”,அங்க நிறுத்த சொன்னோம்,அந்த படகோட்டி ,“தம்பி,நீங்க இருக்கிறது தான் ஸ்ரீஹரிகோட்டா தீவு,இந்த காடு வழியே நடந்தா எல்லையில் ராக்கெட் ஏவு தளம் வரும்,இது forest protected area,சீக்கிரம் போயிடு வந்துடுங்க”

நாங்க அந்த view pointல ஏறுற வரைக்கும் அந்த forest உள்ள போகணும்னு எந்த ஐடியாவும் இல்ல ,ஆனா ஏறுன பின்னாடி ,முடிவு பண்ணோம்..உள்ள போகுரதுனு.அங்க நாங்க பார்த்தது,எங்கள ஆச்சரியம்பட வச்சது!!!!.

அந்த காட்சி,” view pointஇல் இருந்தது கொஞ்சம் தூரம் தள்ளி காடு,அந்த காட்டின் நடுவே வட்ட வடிவில் ஒரு குளம்,அந்த குளத்துல பறவைகள் நீந்திட்டு இருந்துச்சு” ,ஏதோ நாங்க உண்மையா காட்டுக்குள்ள இருக்குற மாதிரி ஒரு பீலிங்.”

அந்த அழகை பக்கத்துல போய் பார்த்தே தீரணும்னு,அந்த குளத்தை நோக்கி நடக்க ஆரம்பிச்சோம்,forest officers வந்துட்டா என்ன பண்றதுன்னு ஒரு பயம்,முதல் தடவ கட்டுக்குள நடக்குற பயம்..எல்லாம் சேர்ந்து செம த்ரில் குடுத்துச்சு,நுழைஞ்ச உடனே ஒரு நரி left சைடுல போச்சு.திகில் இன்னம் ஏறுச்சு,அப்புறம் முழுவதும் இலந்தை மரம்,குனிஞ்சே நடந்தோம்,நாங்க வரும் சப்தம் கேட்டு குளத்தில் இருந்த பறவைகள் பறக்க ஆரம்பித்தன,அப்புறம் அந்த குளத்தில் கொஞ்சம் நிமிடங்கள் உக்கார்ந்துகிட்டு பேசிட்டு திரும்ப படகை நோக்கி நடந்து ,படகில் எரி கரையை அடைய 3 மணி ஆகியது.

This slideshow requires JavaScript.

அப்புறம் எங்களுக்கு உதவி செஞ்ச அவங்களுக்கு நன்றி சொல்லி,light house நோக்கி வண்டிய விட்டோம்.அங்க இருக்குற light house ,சென்னைல இருக்குறத விட பெருசு.அதுல ஏரி “பழவேற்காடு ஏரியின் உண்மையான அழகை ரசிச்சோம்”
WP_20131222_047
திரும்ப சென்னைக்கு வண்டிய கிளப்பி,சரியான வழியில் வீடு வந்து சேர்ந்தோம்.இன்றோடு மூன்று நாட்கள் ஆகிவிட்டது ஆனால் இன்னமும் ஆண்ட பயணம் என் மனதில் உள்ளது.அங்கே அவ்வளவு அழகை ரசித்துவிட்டு இங்கே வந்தவுடன்,சென்னை எனக்கு வித்தியாசமாக தெரிகிறது,திரும்ப அங்கே செல்ல வேண்டும் எப்பொழுது என்று தெரியவில்லை.

அங்கே இருக்கும் போது அந்த இடத்தின் அருமை எங்களுக்கு தெரியவில்லை,அனால் இப்பொழுது நினைத்து பார்க்கும் போது திரும்ப எப்போ அங்கே செல்வோம் என்று இருந்தது.

 

புலிகாட் செல்ல விரும்புவோர் :
(அக்டோபர் டு மார்ச் மாதம் சீசன் டைம்,பறவைகள் அதிக அளவில் இருக்கும்)

சென்னை டு புலிகாட் – 70km.

பைக் அல்லது காரில் செல்லுவோர் : இந்த highway ரூட் safe and ஸ்மூத்.

பேருந்தில் செல்லுவோர் : கோயம்பேடு டு ரெட்ஹில்ல்ஸ்,ரெட்ஹில்ல்ஸ் டு புலிகாட் (பேருந்துகள் அதிக அளவில் உள்ளன)

சரியான நேரம் : காலை 5 மணிகஅல்லது ஆறு மணி,மாலை 5 டு ஆறு

தங்கும் வசதிகள் உள்ளன.

எனக்கு உதவி புரிந்த கோபியின் செல் நம்பர் : 9500623314

இவர் சாப்பாடு மற்றும் போட் எல்லாம் குறைந்த செலவில் முடித்து கொடுப்பார்.

Try and tell – Surely you will luv it !!!!

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: