டிராபிக் தோழி….

இது நடந்தது 2௦௦2-இல். அப்போ சென்னைக்கு IT கம்பெனீஸ் வந்த புதுசு. ஆண்களையும் பெண்களையும் சமமாக பார்க்கும் ,சமமாக வழிநடத்தும் ஒரு தொழில் தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைத்த தருணம்.

அன்னைக்கு எப்பவும் போல ஆபீஸ்க்கு லேட்டா போனேன். லிப்ட்ல போறது எனக்கு பிடிக்காததால ஸ்டெப்ஸ் ஏறிட்டு இருந்தேன். 3rd ப்ளோர் கிராஸ் பண்ணும் போது புதுசா ஒரு ஆபீஸ் ஓபன் பண்ணி இருந்தாங்க.

எல்லா பெண்களும் சுடிதார் போட்டு இருந்தாங்க,சிலர் ஸ்லீவ்லெஸ். அதை பார்த்த என் நண்பன்  ,எல்லாம் கலி காலம் என்றான். நான் சிரித்து வைத்தேன். எல்லாரையும் ஒரு ரவுண்டு லுக் விட்டு என் ஆபீஸ்க்கு என்டர் ஆனேன். வழக்கம் போல ஒரு காபி ,ஒரு கிரீன் டீ , கொஞ்சம் மெய்ல்ஸ்,கொஞ்சம் பாஸ் கிட்ட டோஸ். தி டே வாஸ் ஓவர்.

பைக்க பார்கிங்ல இருந்து எடுத்துட்டு வெளிய வந்தேன், செம டிராபிக் , அப்போ ஒரு பொண்ணு பைக் ஓட்டிட்டு என்னை கிராஸ் பண்ணி கொஞ்சம் முன்னாடி சென்று நின்றார்.

அவர் பைக் ஓட்டிய அழகு, அந்த ஆளுமை  என்னை வியக்க வைத்தது. பெண்களை வீட்டுக்கு வெளியே விடவே ஆயிரத்தெட்டு ஐதீகங்கள் சொல்லும் இந்த நாட்டில் பைக் ஓட்டும் பெண்ணை பார்க்கும் போது எனக்குப் பெருமையாக இருந்தது.
அவளுடன் பேச வேண்டும் என்னும்போல் இருந்தது. என் பைக்கை அவள் பக்கம் நிறுத்தி,

“விருகம்பாக்கம் எப்படிப் போகணும்” என்று கேட்டேன்.

அதற்கு “சாரி, ஐ டோனோ” , என்று பதில் வந்தது.
அதையும் ரசித்தேன். ஒரு ஆண் கேட்டு ஒரு பெண் தைரியமாக பதில் சொல்லி என் ஊரில் நான் பார்த்தது இல்லை. ஒன்று, மூஞ்சை கூட பார்க்காமல் ஓடிப்போவார்கள் அல்லது, தெரியாது என்று தலை குனிந்து செல்வார்கள்.
தலை குனியும் பெண்களைப் பார்க்க பிடிக்காமல், இங்கு வந்த எனக்கு, எனக்கு சமமாக என்னை சக மனிதனாக, பார்க்கும் பெண்களை மிகவும் பிடித்தது. இவரையும் தான்.

இவருடன் நட்பாக வேண்டும் என்று தோன்றியது. அடுத்த நாள் அதே நேரம்,அதே இடம், அதே டிராபிக் , அதே பெண். இந்த முறை அவருடன் ஒரு கப் காப்பி சாப்பிட வேண்டும் என்று நினைத்தேன். அவர் வண்டியின் பக்கம் என் வண்டியை நிறுத்தி,
“விருகம்பாக்கம் எப்படி போக வேண்டும்” என்று அதே கேள்வியை திரும்பக் கேட்டேன்.

அவள் முறைத்தாள். தெரியாது என்றாள்.

“எனக்குத் தெரியும்” என்றேன்,
“அப்போ ஏன் என்கிட்டே கேட்குறீங்க”, என்றாள்.
“நீங்க பைக் ஓட்டுறது எனக்கு பிடிச்சு இருக்கு ” என்றேன்.

“ஓ ,ரசிகரோ !!” , “உங்க ஊர்ல பைக் ஓட்டி யாரையும் பார்த்தது இல்லையா”
“இல்லை, பேயோட்டி தான் பார்த்து இருக்கேன்.”
சிரித்தாள்.
“டிராபிக் கிளியர் ஆக போகுது, ஒரு கப் காபி சாப்பிடலாமா” ,என்றேன்.
“என்ன கரெக்ட் பண்ண பார்க்குறீங்களா “,
“பைக் ஓட்டினாலும், பேயோட்டினாலும் ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் பேசினாலே வரும் பதில் ஒன்று தான் போல”.என்றேன்
சிரித்தாள். சரி வாங்க போலாம் என்றாள்.

இருவரும் சென்றோம்.

அப்போ தான் முதன் முதலில் ஹெல்மெட்டை அவள் கழட்டினாள். மாநிறம், நீண்ட தலை முடி, லட்சணமான முகம், அவளின் ஆளுமை அவள் முகத்தில் தெரிந்தது.

காபி வந்தது.

“ஏங்க நீங்க எங்க பைக் ஓட்ட கத்துக்கிட்டீங்க” என்றேன்.

“அப்பா, என் அம்மாவை விட்டு சென்றபோது”, என்றாள்.
சாரி என்றேன்.
“ஒரு ஆண் , ஒரு பெண்ணை விட்டு செல்லும் போது தான் ஒரு பெண்ணின் திறமை வெளியே தெரியும்”, என்றாள்.

சிரித்தேன்.

“ஆமா, எப்படி என் முகத்தை கூட பார்க்காம என்னை காப்பி சாப்பிட கூப்பிட்டீங்க”, என்று கேட்டாள்.

“நீங்க பைக் ஓட்டிய ஸ்டைல் பிடிச்சது அதான்.”
“என்னது , பைக் ஓட்டுனத பார்த்தா?”

“ஆமா. அண்ணியை அடிக்கும் அண்ணன், அடங்கிப் போகும் அண்ணி, சீரியல் பார்த்து வெளி உலகம் என்ன என்று தெரியாமல் வாழும் அம்மா, பெண்ணியம் பற்றி பேசினால் கையாலாகாதவன் என்று சொல்லும் தோழி, இப்படி தாங்கள் கூண்டுக்குள் இருக்கிறோம் என்று தெரியாமலே வாழும் பெண்களுக்கு நடுவே , பைக் ஓட்டும் இறைவியை நான் பார்த்தேன். பேசணும் என்று ஆசைப்பட்டேன்.”
“கேட்கவே ஆச்சரியாம இருக்கு, நான் பைக் ஓட்டுறது பார்த்து, இவளாம் புருஷன என்ன பாடு படுத்தப் போறாளோ என்று சொல்லும் ஆண்களைத் தான் பார்த்து இருக்கேன், நீங்க புதுசா இருக்கீங்க. ஹாப்பி டு சீ யூ.”
“மீ டூ”,என்றேன்.

அப்புறம் நாங்க ரெண்டு பெரும் அடிக்கடி மீட் செய்தோம். பேசினோம், பழகினோம்.

ஒருநாள், அவள் என்னிடம்.

“எனக்கு உங்களை பிடிச்சு இருக்கு, என்னை அப்படியே ஏத்துக்குற ஒரு ஆண் கிடைக்கிறது கஷ்டம், என் பைக்ல எனக்கு பின்னாடி உட்கார்ந்து வருவதை பெருமையா நினைக்கும் ஆண் எனக்கு கிடைப்பது கஷ்டம், வில் யூ மேரி மீ”, என்றாள்.

“சாரிங்க, எனக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு”, என்றேன்.

“ஏன், என்னிடம் சொல்லவே இல்லை”, என்றாள்.
“சொல்லி இருந்தா நீங்க என்கிட்டே ப்ரீயா பேசி இருக்க மாட்டீங்க “,என்றேன்.
இட்ஸ் ஓகே.

சரி நாம கெளம்பலாம் என்றாள்.

“ஏங்க, நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் செய்யனும்.”

“என்ன..”

“என் வருங்கால மனைவி ரொம்ப நல்ல பொண்ணு, ஆனா சில விஷயங்கள்ல கொஞ்சம் மாற்றனும்.”

“என்ன, உங்க பேச்சை கேட்க மட்டேன்றாங்களா ?”

“இல்லை, நான் என்ன சொன்னாலும் கேட்குறா. நான் தப்பு செஞ்சாக் கூட என்னை கேள்வி கேட்க மாட்டேன்றா, என்ன டாமினன்ட் ஆக்கி ,அவ தன்னை தாழ்திக்குறா….”

“என்னங்க,அவங்க எல்லாரையும் போல தான் இருக்காங்க, உங்க அம்மா, அண்ணி எல்லாரும் அப்படி தான இருக்காங்க ?”,என்றாள்

“இல்லை, நானும் அவங்களும் சமம், நான் தப்பு செஞ்சா அவங்க என்ன திருத்தனும், எனக்கு இது பிடிக்கல. அவங்க மாறனும், அதுக்கு நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்.”

“நான் என்ன பண்ண?”

“அவளுக்கு பைக் ஓட்ட சொல்லித்தரனும்.”

“டிரைவிங் ஸ்கூல்ல சேர்த்துங்க, நானும் அதை தான செய்யப் போறேன்.”

“இல்லை, அவ உங்ககிட்ட இருந்து டிரைவிங் மட்டும் இல்ல, நெறைய கத்துக்க வேண்டி இருக்கு. நாளைக்கு காபி ஷாப்ல அவகிட்ட இன்ட்ரோ குடுக்குறேன்.அதுக்கு அப்புறம் அவ உங்க பொறுப்பு.”
“ஓகே,வில் ட்ரை மை பெஸ்ட். ஆனா நீங்க ரொம்ப டிபரென்ட்.”

“இல்லைங்க, நான் நார்மல் தான், மத்தவங்க தான் வழி மாறி போய்ட்டாங்க.”

“ஹ்ம்ம்….”
அப்புறம், என் வருங்கால மனைவியும், என் டிராபிக் தோழியும் ஒரே ஹொஸ்டல் மாறீட்டாங்க, ரெண்டு பெரும் செம க்ளோஸ் ஆகிட்டாங்க. அவ பைக் ஓட்ட கத்துக்கிட்டா….

சில நாட்கள் கழித்து அவளிடம் நிறைய மற்றம், அவள் தன்னை உயர்த்திக்கொண்டாள், என்னை பல விஷயங்களில் சரியாக வழிநடத்தினாள்…..

ஆனால், போக போக நிறைய பிரச்சனைகள்.

ஒரு நாள் அவள், “நமக்குள்ள செட் ஆகாது, நீ என்னிடம் வாக்குவாதம் பண்ற, நான் சொல்றதை கேட்க மாட்டேன்ற” ,என்றாள்.

“என்ன இப்படி சொல்ற?, நான் என்ன சொன்னாலும் தலையாட்டும் பொம்மையாக இருந்த உன்னை மாற்றினதே நான் தான். இப்போ என்னவே நீ செய்யற தப்பைக்கூட அமைதியா சகிச்சுட்டு போக சொல்ற”?
“ஆமா , என்னால உன்ன அட்ஜஸ்ட் பண்ண முடியாது, நீ பேசுறதுலாம் எனக்கு செட் ஆகாது,எனக்கு வாக்குவாதம் பண்ணா தலைவலி வருது. உன்னாலயும் இந்த பெண்ணியம்,வெங்காயம்னு பேசிட்டு சும்மா இருக்க முடியல, என்னாலையும், நீ வாக்குவாதம் பண்ணா சகிச்சுக்க முடியல….லெட்ஸ் பிரேக் இட் அப்.”
“நன்றி”
என் டிராபிக் தோழியை பார்த்தேன்,நடந்ததை சொன்னேன். சிரித்தாள்.

உன்ன ஏத்துக்குற அளவுக்கு இங்க எந்த பெண்ணும் ரெடியா இல்லை, ஒண்ணா அடிமையா இருப்பாங்க, இல்லை அடக்கி ஆள ட்ரை பண்ணுவாங்க. இங்க சமம் அப்படிங்கிறது வார்த்தைல மட்டும் தான் இருக்கு.

“நான் எதிர் பார்க்கலை”

“சரி அடுத்து என்ன பண்ண போற?”

“இரு அடிமையை கலியாணம் பண்ணி வைப்பாங்க.வாழ்ந்துட்டு போறேன்”
சிரித்தாள்.

இனிமே நீ எந்த பைக் பின்னாடியும் போக மாட்ட…ஹஹா…..

சிரித்து வைத்தேன், வலியுடன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: