போராட்டம் தவிர்!!!

 

மச்சான் இன்னைக்கு தீவுத்திடல்ல போராட்டம் ,வந்துடு.

எதுக்குடா போராட்டம் ?.

விவசாயிங்க டெல்லில போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க , அவங்களுக்கு ஆதரவா நாம இங்க பண்ணுவோம் . நம்ம கெத்த காமிக்க வேணாமா ?.

சரி இங்க கொஞ்சம் உக்காரு, நான் கேட்குற கேள்விக்கு கொஞ்சம் பதில் சொல்லு.

சரி கேளு!!!.

நான் : விவசாயத்துக்கும் டெல்லிக்கும் என்ன சம்பந்தம் ?.

நண்பன்:  அவங்க நம்ம கடன தள்ளுபடி பண்ணலையே , அதுனால தான்.

நான்: விவசாயம் , மாநில அரசோட நிர்வாகத்துக்கு கீழ வருது. இதுல மத்திய அரசு என்ன தவறு செஞ்சது .சரி, கடன தள்ளுபடி பண்றது மாநில அரசா இல்ல மத்திய அரசா ?

நண்பன் : அதெல்லாம் எனக்கு தெரியாது.

நான் : சரி நான் சொல்றத கவணமா கேளு, அப்புறம் உன்னோட மனசாட்சிப்படி முடிவு எடு.

விவசாயம் மாநில அரசின் கீழ வருது. விவசாயத்துக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் செய்து கொடுப்பது மாநில அரசின் கடமை. மத்திய அரசு வருடம் தோறும் MSP (குறைந்த பட்ச்ச விலை) மூலமா ஒவ்வொரு பயிருக்கும் விலை வைக்கும். இது போக மாநில அரசு இதற்கு மேலும் கொடுக்கும்.

விவசாயத்துக்கும் மத்திய அரசுக்கும் உள்ள தொடர்பு இது தான்.  ஆனா சில நேரங்கள்ல மாநில அரசின் செயல்பாடு திருப்த்திகரமா இல்லைனா, மத்திய அரசு சில பயிர் காப்பீட்டுத்திட்டங்கள் மூலமா விவசாய சாகுபடிகளை இன்சூரன்ஸ் செய்ய வழி வகுக்கும். இதை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்குற வேலையை செய்ய வேண்டியது மாநில அரசு.

 

நண்பன் : அப்போ நம்ம விவசாயிங்க போராடுறது தப்புன்னு சொல்றியா ?

நான்: கொஞ்சம் கவணமா கேளு.

இந்த முறை தமிழ்நாட்டுக்கு மழை கடந்த 140 வருடங்கள்ல இல்லாத அளவுக்கு குறைவா பெய்து இருக்கு.  புவி வெப்ப மயமாதல், பருவ நிலை மாற்றம் காரணமா நாம குறைந்த மழை , வெள்ளம், வறண்ட காற்று போன்ற இயற்கை மாற்றத்தை எதிர்பாக்கலாம் இப்பவும் ,எதிர்காலத்திலும்.

அரிசி, கரும்பு போன்ற பயிர்கள் நம் நிலத்திற்கு ஏற்றவை அல்ல. அவை மிகுந்த நீரை  உட்கொண்டு மேலும் நம் பூமியை வறண்ட நிலம் ஆக்குது.

நண்பன் : அப்போ அரிசி சோறே சாப்பிட வேணாம் சொல்றியா ? . நம்ம விவசாயிங்க எங்க போவாங்க ?

நான்: டேய் கொஞ்சம் பொறுமையா கேளு.

இதற்கு\ தீர்வு இருக்கு, அது என்னன்னா :

  1. நாம் நம் நீர்நிலைகளை பாதுகாக்க முன்வரவேண்டும். குடிமராமத்து போன்ற திட்டத்தில் பங்கு எடுக்க வேண்டும். போராட்டம் செய்யுற நேரத்துல நீ இந்த திட்டத்துல சேர்ந்தா, வரும் பருவ மழை அப்போ நீ தூருவாருண ஏரித் தண்ணீர் நம்ம விவசாயத்துக்கு உபயோகப்படும்
  2. போராட்டம் போதாது, அது நிறந்ததர தீர்வும் இல்லை. நாம் நம் உணவு பழக்க வழக்கத்ததை மாற்றனும். அரிசி, கோதுமை போன்ற பயிர்களில் இருந்து கம்பு, சோளம் போன்ற நீர் குறைவாக உறிஞ்சும் பயிர்களுக்கு மாற வேண்டும். நீ மாறுனா மட்டும் போதாது, உன் சொந்த பந்தம் எல்லாரிடமும் பேசி மாற வைக்க வேண்டும். இதன் மூலமா இந்த பயிர்களுக்காண தேவை அதிகம் ஆகும். அப்போ விவசாயிங்க அரிசியிலிருந்து கம்பு சோளம் விளைச்சலுக்கு மாறுவாங்க. இதன்மூலமா அவங்களுக்கு தண்ணீர் பிரச்சனை அறவே தீர்ந்துடும்.
  3. அரசாங்கத்தின் திட்டங்களை, உன் போன்ற மாணவர்கள் விவசாயிகளிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். பல சிறு குறு விவசாயிகளிடம் இது பொய் சேராத காரணத்தால் இவர்கள் வருடாவருடம் துன்பபடுகிறார்கள்.

water-for-the-future-15-638

போராட்டம் செய்றதுக்கு பதிலா நீ இதை செஞ்சா, உன் செயல் உன்னையே அறியாமல் ஒரு பெரிய புரட்சியையே ஏற்படுத்தும்.

நண்பன்: சரி . அப்போ அரசாங்கம் என்ன செய்யனும் ?. நீ சொல்றத பார்த்தா அவங்க மேல எந்த தப்பும் இல்லைனு  சொல்ற மாறி இருக்கு.

நான்: இருக்கு, அவங்க செய்ய வேண்டியது நிறைய இருக்கு. சொல்றேன்.

  1. விவசாயிகளின் பயிர்களுக்கு அதிக லாபம் கிடைக்க செய்யணும். விளைச்சல் காசு போக, மேலும் 50% விலை அதிகம் தர வேண்டும். இது அவங்க தங்களை தொழில்நுட்பம் மூலம் வளர்ச்சியடைய செஞ்சு தங்கள் விளைச்சலை பெருக்க உதவும்.
  2. அரசாங்க திட்டங்கள் அவர்களை சேர சரியான வழிகளை கண்டறிய வேண்டும்.
  3. வெள்ளமோ, வறட்சியோ முன்னெச்சரிக்கை அவசியம். தொழில்நுட்பம் இந்த துறையில் மேன்மை அடைய வேண்டும். அப்போ தன விவசாயிங்க பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ற வாறு பயிர் செய்ய முடியும்.

 

நண்பன்: சரி, இப்போ என்ன வழி. இந்த போராட்டத்துக்கு ?

நான் :  இது வரைக்கும் செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தம் செஞ்சாகனும். பயிர் கடனை சிறு குறு விவசாயிங்களுக்கு ரத்து செய்யணும். ஆனா , அதுக்கு முன்னாடி அவங்க கிட்ட ஒரு உடன் படிக்கை செஞ்சுக்கணும்.

நண்பன்: என்ன அது ?

நான்: இனிமேல். வருடம் தோறும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும். இவர்கள் மூலமா நம் நாட்டின் உள்ள அனைத்து விவசாயிங்களுக்கும் இந்த செய்தியை சொல்ல வேண்டும்.

மேலும் , பயிர் கடன் ரத்து என்பது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் அல்லது குறைக்கப்பட வேண்டும்.  மாறாக, விவசாயிகளின் வருமானத்தை வலு சேர்க்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான கடன் வசதிகள், வானிலை செய்திகள், புது விதமான தொழிநுட்ப விவசாயம் போன்றவை சென்று அடைய வேண்டும். இது அவர்களை கடனாளியாக அல்லாமல் , ஒரு முதலாளியாக மாற்றும்.

 

இங்கே மாறவேண்டியது அரசாங்கம் மட்டும் அல்ல. விவசாயிகளும், நீயும், நானும் கூடத்தான். இது உணர வேண்டிய நேரம் இது.  நாடு என்பது நாம் அனைவரும் தான் . அரசாங்கம் மட்டும் அல்ல. சேர்ந்து செயல்பட்டால் தான் வெற்றி. இதை நாம் உணராமல் விட்டால் , அடுத்த வருடம் போராட்டமும், இந்த மீமும் தொடரும். விவசாயிகளின் நிலைமை மாறது.

 

இப்போ சொல்லு, போராட்டமா இல்ல செயல்பாடானு ?.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: