தோசைக்கரண்டி – உங்க அம்மா தோசை சுட தான் லாயக்கு
தமிழிசை அழகான தமிழ் பெயர்ல?.
நம்ம கதைப்படி தமிழிசையோட நினைவுகள் வழியா அவள் வாழ்க்கையில் நாம் பயணிப்போம்.
என் பெயர் தமிழிசை.
எனக்கு கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கான் பேரு மலரவன்.என் புருஷன் பேரு ஷங்கர்.
நான் “ஹோம் மேக்கர்”.
“ஹவுஸ் வைப்”நு சொல்லுவேன்னு நினைச்சீங்களா?.வீட்டு வேலைக்கு ஆள் வச்சு ,கால் மேல கால் போட்டு சீரியல் பார்த்தா தான் “ஹவுஸ் வைப்”.
நான் காலைல 5 மணிக்கு எந்திரிச்சு வாசக்கூட்டி ,கோலம் போட்டு ,சமையல் செஞ்சு இப்படி எல்லா வேலையும் செஞ்சுட்டு படுக்கும் போது மணி இரவு 11.ஆபீஸ் போனா கூட எட்டு மணி நேரம் தான் வேலை.நான் அதுக்கு மேல வேலை செய்யுறேன்.நான் “ஹோம் மேக்கர்” தான்.
நான் காய்கறி வாங்க மார்கெட் போயிட்டு இருந்தேன்.அப்போ ஒரு பந்து பறந்து வந்துச்சு..நன் கேட்ச் புடிச்சுட்டேன்.பின்னாடி திரும்பி பார்த்த ஒரு குட்டி பொண்ணு.
“அக்கா அக்கா ,அது என் பந்து தான்..என் அண்ணா தான் அடிச்சான் ,பிளீஸ் தாங்கக்கா”.
“உன் பேரு என்னமா ?”
“வினோவா…”
“வித்யாசமா இருக்கு..இந்தா போய் விளையாடு”.
அந்த பொண்ண பார்க்கும் போது எனக்கு பழசு எல்லாம் நியாபகம் வருது.
எனக்கு 7 வயசு இருக்கும்.எங்க அப்பா என்ன பையன் மாதிரி வளர்த்தார்.நானும் கவுன்லாம் போட மாட்டேன் .எப்பவும் ஜீன்ஸ் ட்ரவுசர் தான்.
எங்க ஏரியா முழுக்க பசங்க தான்.நான் ஒரே பொண்ணு.அந்த வயசுல எந்த வித்தியாசமும் தெரியல.அவங்க கூட தான் கிரிக்கெட் வெளையாடுவேன்.கோலி,கிட்டிபுல்,ஐஸ்பாய் எல்லாம் வெளையாடுவேன்.நான் கொஞ்சம் வளத்தியா இருக்குறதுனால நான் தான் எங்க டீம் கேப்டன்.
கோபு ,என் பெஸ்ட் பிரண்ட்.நான் இல்லாம அவன் விளையாட போகவே மாட்டான்.ஸ்கூல்ல கூட எனக்கு பசங்க விளையாட்டு தான் பிடிக்கும்.
எங்க அம்மா தான் “எப்போ பார்த்தாலும் பசங்க கூடவே வெளையாடுற இன்னொரு தடவ அந்த கோபு கூட உன்ன பார்த்தேன் ,தொலைச்சுபுடுவேன் தொலைச்சு”.சரியான் ஹிட்லர்.
ஆனா அப்பா ,“கொஞ்சம் வாய மூடுறியா….நீ போய் விளையாடுமா!!..”என் பொண்ணு ஒலிம்பிக்ல மெடல் வாங்கிட்டு வரும் போது ஆரத்தி தூக்கிட்டு வந்த ..கொன்னுபுடுவேன் ஆமா.”
என் அப்பா எனக்கு எப்பவும் சப்போர்ட் தான்.
ஒன்பதாம் வகுப்பு,புது pt மாஸ்டர் வந்து இருந்தாரு.பசங்க எல்லாம் ஓட்ட பந்தயத்துக்கு பேர் குடுத்தாங்க.நானும் குடுத்தேன்.
ஓடுனேன்…ஆறாவதா வந்தேன் ஓடுனதே ஆறு பேரு தான்.
எல்லாரும் சிரிச்சாங்க.கோபு என்ன அழாம பார்த்துகிட்டான்.
“டேய் எப்பிடியாவது அவங்க முன்னாடி நான் ஜெய்க்கனும்டா”
“அவ்ளோ தான ,நாளைக்கு காலைல groundகு வந்துடு”.
நானும் போனேன்..ஒரு வாரம் என்ன ஓட ஓட வெரட்டிடான்.”வேலியில போற ஓணான எடுத்து வேட்டியில விட்ட கதையா ,நானே வாயக்குடுத்து மாட்டிகிட்டேன்”.
அந்த வாரம்,ஓட்ட பந்தயம் வச்சாங்க நான் செகண்ட் பிளேஸ்.என்னையும் சேர்த்துகிட்டாங்க.அப்படியே ஸ்கூல் லெவல் ,zonal லெவல் ,ஸ்டேட் லெவல்நு கலந்துகிட்டு ஜெய்ச்சேன்.
எங்க அப்பாக்கு ரொம்ப சந்தோஷம்.ஆனா ஹிட்லர்க்கு தான் பிடிக்கல.
+1,நான் வயசுக்கு வந்தேன்.சரியா,ஒரு மாசம் ஸ்கூல் போகல ஏன்னா நான் வயசுக்கு வந்தேன்.ஒரு மாசம் கழிச்சு ஸ்கூல் போனேன் .ஸ்போர்ட்ஸ் டே ஆரம்பிக்க இன்னும் ஒரு வாரம் தான் இருக்குனு pt மாஸ்டர் சொல்லிடாரு.நான் கலந்துக்கனும்.
“இது வரைக்கும் நீ வேற…இனிமே நீ வேற..உனக்கு புரியும்னு நினைக்குறேன்”,இது ஹிட்லர்.
என் கண்ணுல…கர்நாடகா திறந்துவிட்ட காவேரி நீர் மாதிரி சொட்டு சொட்டா தண்ணி.
“நீ கொஞ்சம் வாய மூடுறியா….இப்படியே நம்ம நாட்டுல பொம்பள புள்ளைங்கள அடக்கி அடக்கியே அவங்க திறமைய வளர விடாம பண்ணிடுங்க..பொம்பளைக்கு எதிரி ஆம்பள இல்லடி உன்ன மாதிரி பொம்பளைங்க தான்”,இது என் அப்பா என் ஹீரோ.
“நீ ஓடுமா …ஒலிம்பிக்ல ஜெயிச்சு இவ மூஞ்சுல கரிய பூசு”,என் ஹீரோ.
அப்புறம் என்ன..ஹிட்லர் வாய மூடி தான ஆகணும்.
ஸ்போர்ட்ஸ் டேல நான் தான் வின்னர்.அப்புறம் zonal லெவல் , நேஷனல் லெவல் கலந்துகிட்டு ஜெய்ச்சேன்.
ஏதோ படிச்சேன்…காலேஜ் சேர்ந்தேன்.B.Sc Zoology.
அங்கயும் ஸ்போர்ட்ஸ் தான்.
அந்த வருஷம் ஒலிம்பிக்ல கலந்துக்க நேஷனல் லெவல் டீம்ல ஆள் எடுக்குறதா என் காலேஜ்கு நியூஸ் வந்துச்சு.உயிர குடுத்து practice பண்ணேன்.அந்த நாள் வந்துச்சு..
என் அப்பா ,என் ஹீரோ “தைரியமா போய்ட்டுவாமா நீ கண்டிப்பா செலக்ட் ஆகிடுவ“.
நான் groundல காலடி எடுத்து வச்சேன்…
“தமிழ்………………………………………”
திரும்பி பார்த்தேன்’,என் தோழி மைதிலி.
“உன் அப்பா ஹார்ட் அட்டாக்ல எறந்துட்டார்”.
நான் மனதுக்குள்...”இறந்தது அவர் மட்டுமில்ல ,என் லட்சியமும் தான்”.
சில நாட்களுக்கு பின்….
“இனி நீ ஓடி ஒன்னும் கிழிக்க போறது இல்ல….ஒழுங்கா படிச்சு வேலைக்கு போற வழிய பாரு”,அம்மா.
சரி,நமக்கு நம் அப்பா போல ஒரு கணவன் அமைஞ்சா கல்யாணத்துக்கு பின்னாடி கூட சாதிக்கலாம்நு மனச தேத்திகிட்டேன்.
காலேஜ் வாழ்க்கை முடிஞ்சது.
பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்து இருக்காங்க.
“பெண்களுக்கு தான் எத்தனை மாற்றங்கள்…இடைவிடாது?”
ஒரு பெருசு “பொண்ணு அழகா இருக்கு,நல்லாவும் படிச்சு இருக்கு…மாப்பிள்ளைக்கும் பிடிச்சிருக்கு..ஆனா மாபிள்ள என்ன ஆசைபடுரார்னா….”
சரி நேரா விஷயத்துக்கே வாரேன்,”பொண்ண பத்தி விசாரிச்சபோ எல்லாரும் நல்லா தான் சொல்றாங்கா,ஆனாபொண்ணுக்கு ஓட்ட பந்தயத்துல விரும்பம்நு கேள்விபட்டோம்..நமக்கு எதுக்குங்க இந்த ஓட்டம்லாம்..ஓடி என்ன pt உஷா மாதிரியா ஆக போகுது?“.
நான் மனதில் “டேய் கிழவா ,உன்னால நடக்கவே முடியாது ,நீ ஒட்டத்த பத்தி பேசுறியா?“.
“உங்களுக்கு சரின்னா மாபிள்ள வீட்டுல வரதட்சிணை கூட வேணாம்நு சொல்லிடாங்க….“,இது இன்னொரு பெருசு.
முடிஞ்சது என் கதை.
இவ்ளோ தாங்க ,இப்படி தான் எனக்கு நடந்த கொடுமைய கூட காமெடியா பேச வேண்டி இருக்கு.
தோ,ஆறு வருடம் ஓடிடுச்சு….
“தமிழ்…..தோசை சுடு ..பையன் வந்துட்டான் பாரு….”,என் புருஷன்.
சரிங்க……
“என் கனவுகள் ஒரு ஆண்மகனால் ஆக்கப்பட்டது (என் அப்பா),ஒரு ஆண்மகனால் ஊட்டி வளர்க்கபட்டது (கோபு,pt மாஸ்டர்),இப்பொழுது ஒரு ஆண் மகனால் அழிக்கப்பட்டது(என் புருஷன்).”
“அம்மா தோசா………பசிக்குது…..”,என் பையன்.
வெளியே என் புருஷனும் என் மகனும் ஏதோ பேசிட்டு இருக்காங்க…
“டேய் மலரவா,இன்னைக்கு ஒலிம்பிக் போட்டி நடதுச்சுல? அதுல நம்ம இந்தியாவ சேர்ந்த மரிகோம் bronze மெடல் வாங்கி இந்தியாவுக்கே பெருமை சேர்த்து இருக்கங்கடா.உன் அம்மாவும்
தான் இருக்காளே…தோசை சுட தான் லாயக்கு…..ஹா ஹா ஹா ….”
அவர்கள் முன் தோசை கரண்டி (எப்படி டைட்டில கொண்டு வந்தோம்ல…..!!!) பறந்து வந்து விழுந்தது,அவர்கள் பேய் அறைஞ்ச மாதிரி என்ன பார்த்தாங்க
“உங்கள மாதிரி ஆம்பளைங்க இருக்குற வரைக்கும் என்ன மாதிரி பொம்பளைங்க மெடல் இல்லடா….ம..ர கூட புடுங்க முடியாது….”
“இந்த மாதிரி எல்லாம் பண்ணனும்னு வெறி தான் ..என்ன பண்றது தமிழ் பொண்ணு ஆச்சே..அமைதியா சிரிச்சுட்டு அவங்களுக்கு தோசை சுட்டு போட்டேன்….
ஜெயிக்கவும் விட மாட்டீங்க…அப்படியே தடைகளை மீறி ஜெயிச்சாலும் அவ பொம்பள இல்ல ..ஆம்பளனு சொல்லுவீங்க (எடுத்துக்காட்டு சாந்தி).
“ஏன்னா என் மாதிரி பெண்களின் லட்சியம் ஆண்களின் கையில் தான இருக்கு…அவங்க நினைச்சா அது மெடலா மாறும்…இல்லாட்டி ம…ரா போகும்”